முதலாம் ஆண்டு நிறைவு அக்டோபர் 16 2018
அனைத்து பாரம்பரிய சித்த உறவுகளுக்கும் வணக்கம்,
சித்தர்களின் அருளால் நமது அமைப்பானது துவங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது,
அனைத்து பாரம்பரிய சித்த மருத்துவர்களின் தொழில் பாதுகாப்பு, அரசுப் பதிவு, அரசு அங்கீகாரம், அரசுத் தரப்பில் பிரதிநிதித்துவம், சட்ட ரீதியான பாதுகாப்பு, அரசு தரப்பில் தனி கவுன்சில் மற்றும் தனி வாரியம் ஏற்படுத்துதல் மற்றும் நமது பாரம்பரிய சித்த உறவுகள் அனைவரையும் பங்குதாரர்களாக்கி உலகத் தரத்தில் ஒரு மருந்து செய் நிறுவனத்தை ஏற்படுத்தி உலக மருந்து வர்த்தகத்தை நமது மண்ணை நோக்கி ஈர்த்து பாரம்பரிய சித்த மருத்துவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், சித்தர்களின் பரம்பரையை அறிவித்து அனைத்து ஊர்களிலும் சித்தர்களின் வழியில் ஆசிரமங்கள் மற்றும்மடங்களை நிறுவி நமது பாரம்பரியத்தை மீண்டும் புத்துயிர் கொடுத்து நிலைப்பெற செய்தல் முதலான புனிதமான கொள்கைகளை கொண்டு பயணிக்கத் துவங்கினோம்.
எவ்வளவோ எதிர்ப்புகள், துரோகங்கள், இருட்டடிப்புகள், கருத்துத் திருடு முதலான வஞ்சகங்களை கடந்து நமது இலக்கை நோக்கிய பாதையில் நெறிபிசகாமல் சிறப்பாக வெற்றிப் பயணம் செய்து ஒரு வருடத்தை கடந்துள்ளோம் என்பது சித்தர்களின் அருளும் வழிகாட்டுதலுமே ஆகும்.
நமது அமைப்பு துவங்கப் பெற்றதிலிருந்து மாநில அளவில் அனேக ஊர்களுக்கு சுற்றுப் பயணங்கள் செய்து, மாநிலம் மற்றும் தேசம் கடந்த ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி மாநில அந்தஸ்த்தில் "தமிழ்நாடு பாரம்பரிய சித்த மருத்துவக் கூட்டமைப்பு" என்ற சங்கத்தையும் "சித்த மரபினர் கூட்டமைப்பு என்ற சங்கத்தையும்" நிறுவி சிறப்பான பிரதிநிதித்துவத்தோடு பொறுப்பாளர்களை அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு செய்து அமைப்பிற்கான அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் சிறந்த ஒரு நம்பிக்கையையும், பாதுகாப்பான சூழ்நிலைகளையும், நல்லாதாரு எதிர்காலத்தையும் ஏற்படுத்தி வந்துள்ளோம். சித்தர்களின் அருளால் இனியும் எத்தனையோ சாதனைகளையும் செய்யத்தான் போகிறோம்.
தற்சமயத்திற்கு எளிமையான முறையில் அனைத்து பொறுப்பாளர் பெருமக்களும், அமைப்பின் அபிமானிகளும் அவரவர் தரப்பில் அமைப்பு சீர் பெற்று சிறப்பாக வளர்ந்து சாதனைகள் பல புரிந்திட கோவிலுக்கு சென்றும், பூசைகள் செய்தும், வழிபாடுகள் செய்தும் இறைவனிடமும் சித்தர்களிடமும் பிராத்தனை செய்வோம்.
கூடிய விரைவில் நமது அமைப்பின் உறுப்பினர் சேர்க்கை துவங்கும், மேலும் கனிசமான எண்ணிக்கையை எட்டியவுடன் சட்டரீதியான பாதுகாப்பு வியூகத்தை ஏற்படுத்தி பிரகடனப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் பின் பொதுக்குழு கூட்டம் திட்டமிடப்படும், நடக்கவிருக்கும் நமது அமைப்பின் பொதுக்குழு கூட்டமே ஒரு பெரிய கட்சி மாநாடு போல இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கையில் மனம் மிகுந்த சந்தோஷம் பெறுகிறது. அந்த சமயமே நமது அமைப்பின் முதலாம் ஆண்டு விழாவாகவும் கூட கொண்டாட ஏதுவாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி,
ஸ்ரீல ஸ்ரீ பிரம்மரிஷி குரு மஹா சன்னிதானம், பிரேம், ஓசூர்,
தலைமை சித்தர் பீடம்,
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு பாரம்பரிய சித்த மருத்துவக் கூட்டமைப்பு 70/2018,
சித்த மரபினர் கூட்டமைப்பு 34/2018.
நாள்: அக்டோபர் 16 2018

Comments
Post a Comment