மூலக் குடோரி எண்ணெய்

மூல குடோரி எண்ணை

தேவையான பொருட்கள்

சிற்றாமணக்கு எண்ணை - 1 லிட்டர்
கற்றாழை சாறு - 1 லிட்டர்
எலுமிச்சை சாறு - 1 லிட்டர்
பிஞ்சி கடுக்காய் - 150 கிராம்

முதலில் பிஞ்சி கடுக்காயில் சிறிது ஆமணக்கு எண்ணை தடவி கடாயில் போட்டு வறுக்க வேண்டும். கடுக்காய் முந்திரி திராட்சை போன்று உப்பி விடும். சிறிது கடுக்காயை மட்டும் நன்றாக அரைத்து கற்றாழை சாறு எடுக்க பயன்படுத்தவும். மீதி கடுக்காயை ஒன்றிரண்டாக தட்டி மேலள்ள சாறு எல்லாம் ஒன்றாக கலந்து நீர் சுண்டிய பின் காய்ச்சி இரும்பு சல்லடையால் வடித்து பத்திரப் படுத்தவும். அவ்வளவு தான் மருந்து.

அளவு - 1 தேக்கரண்டி முதல் 2 தேக்கரண்டி வரை

இரவு மட்டும். நோயின் தன்மைக்கு ஏற்ப காலை இரவு கொடுக்கலாம்.

பயன்கள் : மூலம், கணை சூடு, மலச்சிக்கல், பித்த வெடிப்பு, உடலில் பித்தம், இருமல், தொடர் இருமல், ஆசனகடுப்பு, மூல சூடு, குன்மம், உடலில் கண்,மூக்கு,செவி,வாய் எரிச்சல், மார்பு எரிச்சல், தாகம் தீரும்.

இது குருநாதர் சொன்ன முறை ... அனுபவத்தில் நன்றாக உள்ளது.

நன்றி,

மேலும் பயணிப்போம் . . .

J.லோகேஷ் குமார்,
வேலூர்.

Comments

Popular posts from this blog

வெங்கார பற்பம்

படிகார பற்பம் (அனுபவ முறை)

லிங்க செந்தூரம்