காணாக் கடி, அலர்ஜிக்கு

காணாக்கடியால் ஒரு சிலருக்கு திடீரென அரிப்பும் தடிப்பும் ஏற்பட்டு அதனால் தொந்தரவு ஏற்படும். இதுவே காணாக்கடி என்பதாகும்.

இதற்கு மருந்து குப்பை மேனி இலை வேப்பிலை தும்பை இலை இவற்றை நான்கைந்து பறித்து கழுவி அரைத்து மிளகளவு சுண்ணாம்பு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று நாள் சாப்பிட அரிப்பு தடிப்பு நீங்கும்.

எல்லா நேரமும்  பச்சிலை தேடிட முடியாமல் போனால் இவற்றை சூரணம் செய்து வைத்துக் கொள்ளலாம்.

மற்றொரு முறை,

 சிவனார் வேம்பு100, பறங்கிபட்டை100,குப்பை மேனி 100, கடுக்கா50 ,நெல்லிக்கா50, தான்றிக்காய்50 இலவங்க பட்டை50 கிராம்இந்த அளவில் எடுத்து பொடி செய்து கொண்டுஅதில் பல கரை பஸ்பம்20கிராம் கலந்து காலை 5கிராம் அளவில் காலைமாலை வெந்நீருடன் சாப்பிட அரிப்பு பூச்சி கடி கரப்பான் கிரந்தி,படை சொறி சிறங்கு மலச்சிக்கலால் வரும் அரிப்பு தீரும்.

மற்றொரு முறை,

அவுரிவேர், சிறியாநங்கை, மிளகு இவற்றை சம அளவில் எடுத்து பொடி செய்து காலை மாலை 2கிராம் அளவு சாப்பிட விஷக்கடியினால் உண்டாகும் சரும பாதிப்பு நீங்கும்.

நன்றி வணக்கம் N.V. பாஸ்கரன் சென்னை SMF

Comments

  1. மிக்க நன்றி அய்யா. குப்பை மேனி இலை வேப்பிலை தும்பை இலை சேர்த்து கொடுத்த பின்பு குணமானது. பின்பு சில நாட்களில் மீண்டும் மாலை வேளையில் தடிப்புத் தோலழற்சி அரிப்பும் வருகிறது. மறுபடியும் இதை கொடுக்கலாமா?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெங்கார பற்பம்

படிகார பற்பம் (அனுபவ முறை)

லிங்க செந்தூரம்