தமிழ் மண்ணில் தலைமை சித்தர் பீடம்

சித்தர்கள் அருளால் நமது தமிழ் மண்ணில் பதினென் சித்தர்களின் தலைமை சித்தர் பீடம் உருவாக்கம்:
 
பதினென் சித்தர்கள் வழியில் நமது "சித்த மரபினர் கூட்டமைப்பானது" தலைமை சித்தர் பீடம் ஒன்றை நமது புனித மண்ணான தாய்த்தமிழ் மண்ணில் நிறுவி அதன் மூலம் கீழ்கண்ட திருப்பணிகள் செய்ய துவங்கியுள்ளது.

01. பதினென் சித்தர்களின் மார்கத்தில் உள்ள ஐவகை கலைகளான கால ஞானம், மந்திரவாதம், கற்ப ஞானம், யோகஞானம் மற்றும் மெய்ஞானம் முதலான மரபு கலைககளுக்கு உலக அரங்கில் இவ்வமைப்பே தலைமை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பில் பயணித்து சித்தராகிட இந்த உலகில் பிறந்த அனைத்து மக்களுக்கும் உரிமை உண்டு.

02. பீடத்தின் ஒழுக்க விதிமுறைகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட குருப்பரம்பரையை விதிஅம்சப்படி தேர்வு செய்து சித்த மார்கத்தில் சாதி, மதம், இனம், மொழி, பாலினம், வயது, நவீனக் கல்வித்தகுதி என எந்த பாகுபாடுமின்றி சித்த மார்கத்தை கற்று சித்தர் பயணத்தை மேற்கொள்ளலாம்.

03. தலைமை சித்தர் பீடத்தின் மூலம் தனது குருப்பரம்பரையை பெற்ற குருமகா சன்னிதானங்கள் அவரவர் பெற்ற சித்த பரம்பரையின் பெயரில் ஆசிரமத்தை நிறுவுதல்.

04. சித்தர்களின் குருப்பரம்பரையில் அனைத்து ஊர்களிலும் ஆசிரமங்களை நிறுவி மக்களுக்கு சித்த மார்க்கத்தைை எடுத்துரைத்து பிணி போக்கி கல்வியைையும் மெய்ஞானத்தையும் போதித்தல்.

05. இந்த புனித மண்ணில் வாழும் மகான்களுக்கும் மற்றும் வாழ்ந்த மகான்களுக்கும் அவர்களது ஜீவசமாதிகள் முதலிய பொக்கிஷங்களையும்  பாதுகாத்து  பேணிக்காத்தல்.

06. உலக மக்களின் நலன் கருதி சித்தர்களின் படைப்புகளை சேகரித்தல், ஆய்வுகள் செய்தல், பழைய சுவடிகளை படியெடுத்து பொருள் விளக்கம் தந்து பதிப்பு செய்து வெளியீடு செய்தல்.

07. சித்தர்களின் வழிமுறையான மணி, மந்திர, ஒளடத மார்கத்தில் மருத்துவத்தை துறைகளாக அதாவது நோய் நாடல், சோதிட மற்றும் மாந்திரிக முறையில் நோய்க்காக்கான காரணத்தை ஆய்தல் மற்றும் உரிய பரிகாரத்தை தேர்வு செய்து வினைக் கருமங்களை கலைதல், மருந்து தயாரித்தல், மருந்தாளுதல், முலான பல துறைகளை அனைத்து ஊர்களிலும் நிறுவி நோய், பீடை, கருமத்தால் துயறுற்று வரும் மக்களுக்கு அவர்களின் மனம் மற்றும் உடலிற்கு தீங்கில்லாத சிறந்த தீர்வை தந்து அவர்களுக்கு நல்வாழ்வு மற்றும் மறுவாழ்வு தந்து உலகின் முதன்மை மருத்துவமாக சித்த மருத்துவத்தை கொண்டுவருதல்.

08. மக்களின் இன்றய தேவைக்கேற்ப சித்தர்கள் இனம் காட்டிய அரிய மூலிகைகள், ஜீவப்பொருட்கள், உலோகங்கள், உப்பினாங்கள், உபரசங்கள், பாடாணங்கள் மற்றும் அவற்றின் வகைகள், பண்புகளை, பயன்கள் போன்றவற்றை தொகுத்து வகைபடுத்தி ஆவணப்படுத்துதல்.

09. சித்தர்கள் முறையில் வரும் அனைத்து மருந்துப்பொருட்கள் மற்றும் அவற்றின் மூலப்பொருட்களை எளிதாக அனைத்து சித்தர் மார்க்கத்தவர்களுக்கும் கிடைக்கும் பொருட்டு தொடர்பான நிறுவனங்களை ஏற்படுத்தி உரிய உற்பத்தி வியூகங்களை செய்தல்.

10. சித்த மார்க்கத்திற்கு சம்மந்தப்பட்ட அரிதாகிவரும் மூலிகைகள் மற்றும் ஜீவப்பொருட்களை இனம் கண்டு அவற்றின் உற்பத்தி மற்றும் பெறுக்கத்திற்கான வழிமுறைகளை ஆய்வு செய்து நடைமுறைபடுத்துதல்.

11. விவசாயிகளுக்கு மூலிகைகள் மற்றும் ஜீவப்பொருட்களை உற்பத்தி செய்தல் மற்றும் சந்தைபடுத்துதல் தொடர்பாக இலவச பயிற்சிகளை தந்து அனைவரும் பயன்பெறும் வகையில் தொடர்ந்து வழிகாட்டுதல்.

12. நிலத்தடி நீரை பெறுக்கக் கூடிய மர வகைகளை நாடெங்கும் குறிப்பாக புரம் போக்கு, தரிசு நிலங்களிலும், விவசாயம் செய்யப்படாத நிலங்களிலும், வனப் பகுதிகளிலும், மலைகளிலும் நடவு செய்தல்.

13.  கிராமப்புறங்களை மேம்படுத்தும்  வகையிலும் பாரம்பரியத்தை காக்கும் வகையிலும் நமது பாரம்பரிய முறைபடி நாட்டு பசு, ஆடுகள், கோழிகள், எருமைகள், மீன்கள் முதலானவற்றை இனம் கண்டு வகைபடுத்தி நாட்டு இனங்களைைை மேம்படுத்துதல்.

14. பாரம்பரிய விவசாயம், பாரம்பரிய உணவு, பாரம்பரிய வாழ்வியல் முதலான அத்தியாவசியங்களை ஆய்வு செய்து அதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைத்து பாரம்பரிய வாழ்வியல் முறைக்கு வர வழி காட்டுதல்.

15.தலைமை சித்தர் பீடம் மூலம் அனைத்து துறைகளுக்கும் உரிய ஆய்வு களங்களை (R &D) ஏற்படுத்தி சித்தர்கள் வழியில் பாரம்பரிய முறையில் நமது மக்களின் எதிர்காலத்தை மேன்மைைை படுத்தும் வகையில் வரலாறு, கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், சுகாதாரம், வணிகம், பொருளியல், மேலான்மைை, நிர்வாகம் முதலிய அத்தியாாவசியமான கல்வித்துறைகளில் ஆய்வு மையங்களைைைை நிறுவி தற்சார்பு தொழிலாதாரம் மற்றும் பொருளாதரத்தை உருவாக்குதல்.

16. அழிந்துவரும் நமது பாரம்பரிய கலைகள் மற்றும் தொழில் முறைகளை ஆய்வு செய்து வகைபடுத்தி, மேன்மைசெய்து மற்றும் நெறிப்பபடுத்தி மீண்டும் புத்துயிர் தந்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்து காத்தல்.

17. சித்தர்களின் யோகஞானக் கலைகளை அனைத்து மக்களும் கற்று பயன்பெறும் வகையில்  இலவசமாக ஆசிரமத்தில் பயிற்றுவிக்கப்படும்.

18. சித்தர்களின் மெய்ஞானக் கலைகளை அனைத்து மக்களும் கற்று பயன்பெறும் வகையில் இலவசமாக ஆசிரமத்தில் பயிற்றுவிக்கப்படும்.

நன்றி,

தலைமை சித்தர் பீடம்,
ஸ்ரீல ஸ்ரீ பிரம்ம ரிஷி குருமகா சன்னிதானம், பிரேம், ஓசூர்
5/316 - 23, ஓம் சாந்தி நகர், மத்தம் ரோடு,
ஓசூர், கிருஷ்ணகிரி  மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
Pin - 635109
செல் - 9952965281

Comments

Popular posts from this blog

வெங்கார பற்பம்

படிகார பற்பம் (அனுபவ முறை)

லிங்க செந்தூரம்