இரு பூர பற்பம்

வணக்கம்

கழுத்தை சுற்றிவரும் கண்டமாலை புண்கள் புரைகள் கட்டிகள் ஆசனவாய் பிறப்புறுப்பு அடிவயிற்று பகுதி கருப்பை கர்ப்பப்பை போன்றவற்றிலுண்டாகும் புற்றுக்கட்டிகள் புண்கள் ஆகியவற்றுக்கான அநுபவ மருந்து இருபூர பற்பம் செய்முறை.

சுத்தித்த பூரம் 7 கிராம்
பச்சை கற்பூரம் 7 கிராம்

இரண்டையும் கல்வத்திலிட்டு நன்றாக உறவுபட அரைத்து பிறகு எலுமிச்சம்பழ சாற்றை விட்டு மூன்றுமணி நேரம் அரைத்து ஒரே வில்லையாக செய்து நன்கு ஈரம் போக காயவைத்து சிறுஅகலிலிட்டு மூடி சீலைமண் செய்து காய்ந்ததும் கவசத்தின் இரண்டு பங்கு எடைவரட்டியை கொளுத்தி புகையடங்கியபின் கவசத்தை உள்ளே வைத்து கவசத்திலிருந்து புகை கானும் சமயம் கவனமாக பார்த்து எடுத்து ஆறவைத்து வில்லையை எடுத்து அரைத்து பத்திர படுத்தவும்.

அரிசியளவு பற்பத்தை தகுந்த அனுபானங்களில் தர மேற்சொன்ன நோய்கள் குணமாகும்.அநுபவம்

நான்கு நாட்கள் காலை மாலை இருவேளை தந்து பின் ஒருவாரம் விட்டு தேவையானால் தரவும்.

நூல் ஆதாரம்
ஜனாப் ஹக்கீம் பா.மு அப்துல்லா சாயுபு அவர்களின் அநுபோக வைத்திய நவநீதம் 4 ஆம் பாகத்திலுள்ளது.

மேல் விரங்களுக்கு தனியலை வாட்ஸப் எண்ணில் தொடர்பு கொள்ளவும்......நன்றி

மருந்துகளையாவது மறைக்காமல் வெளிப்படுதாதினால் மட்டுமே நமது பாரம்பரிய சித்தமருத்துவம் தழைத்தோங்கும் நன்றி......

சித்.வா.மனோகரன்
சங்ககிரி
மாநில இணைதலைவர்
சேலம் மாவட்ட தலைவர்
              T.S.M.A
கற்ப முப்பு இரசவாத ஆய்வாளர்.

Comments

Popular posts from this blog

வெங்கார பற்பம்

படிகார பற்பம் (அனுபவ முறை)

லிங்க செந்தூரம்