தேரையர் களிம்பு

திரு ஆத்மஜோதி கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்களின் தலைமையில் இயங்கிவந்த தமிழ் பண்பாட்டு சித்தமருத்துவ அறிவு ஆய்வகத்தின் தலைமை குருவாகிய பேராம்பட்டு தெய்வத்திரு P.R.கிருட்டிணன் ஜயா அவர்களின் அனுபவ ராஜகளிம்புமுறை.

தேவையான பொருட்கள்
=====================
இலிங்கம் 16.5 கிராம்
இரச கற்பூரம் 25 கிராம்
மிருதார்சிங்கி 25 கிராம்
பால்துத்தம் 25 கிராம்
மயில்துத்தம் 6 கிராம்
குங்கிலியம் 100 கிராம்
தேங்காய் எண்ணெய் 500 மிலி
தண்ணீர் 2.5 லிட்டர்

பஷாண சரக்குகளை சுத்திசெய்து வரிசைப்படி அரைத்து உறவான உடன் 3 சாமம் அரைத்து வைத்துக்கொள்ளவும்.தேங்கா எண்ணையில் குங்கிலியத்தை பொடித்து போட்டு சூடாக்கி குங்கிலியம் நன்கு கரைந்தபின் இரும்புவடியில் வடிக்கவும்.உடன் அரைத்துவைத்த பாஷாண சரக்குகளை அதிலிட்டு கரண்டியால் உறவுபட கலக்கவும்.பிறகு தண்ணீரை அளவுபடி ஊற்றி மத்தால் நன்கு கலக்கி கைபொருக்கும் பதத்தில் கையால் நன்கு அரைமணிநேரம்வரை கலக்கவும்.மருந்துதயார்.

தீரும் நோய்கள்
இது வெளிப்பிரயோக களிம்பு.
சேற்றுப்புண்,கால்பித்தவெடிப்பு வண்டுகடி அறைகளில் வரும் அரிப்பு தீப்புண் வெட்டுக்காயம் சர்க்கரைநோய்ப்புண் முகப்பரு தலைப்பொடுகு புற்றுப்புண் குழிப்புண் முதலியண அதிசயத்தக்க அளவில் குணமாகும்.

இந்தமருந்தை அனைவருக்கும் பகிர அனுமதியளித்த T.S.M.A,..S.M.F வின் மாநில செயற்குழு உறுப்பினரும் நாமக்கல் மாவட்ட துணை த்தலைவருமான குமாரபாளையம் திரு A.வெங்கடேஷன் ஐயா அவர்களுக்கு நன்றி.இதை செய்ய முடியாத அன்பர்கள் கீழுள்ள அவரின் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

97882 93939
70109 36380

இந்த மருந்தை பலமுறை பயன்படுத்தி பலனடைந்தவன் என்றமுறையில் அதற்கு நானே உத்திரவாதமாக இந்தபதிவை இடுகிறேன்......நன்றி

வா.மனோகரன்
சங்ககிரி.

Comments

Popular posts from this blog

வெங்கார பற்பம்

படிகார பற்பம் (அனுபவ முறை)

லிங்க செந்தூரம்