இரசவாத ரகசியம் அனுபவம்

*இரசவாத ரகசியம் அனுபவம்*

பொதுவாக சித்தர்கள் கூறும் இரசவாத முறையில் இரசவாதம் முடிக்க வேண்டும் என்றால் மிகவும் சிரமமான காரியமாகும். அதாவது *ஜெயநீர், பாஷாண கட்டு, களங்கு, முப்பூ, குருமருந்து* போன்றவை தேவைப்படும்.ஆனால் பாரம்பரிய அனுபவ இரசவாத முறைகளில் மிகவும் சுலபமாகவும் செய்யக்கூடிய முறைகள் உள்ளன. அவைகளில் அனுபவப் பூர்வமாக  நடந்த ஒரு உண்மை சம்பவத்தை இப்போது பதிவு செய்கின்றேன் இது திருப்பூர் அருகில் உள்ள அவிநாசி என்ற ஊரில் நடந்ததாகும்

இந்த ஊரில் சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு நண்பர்கள் 2 பேர் ரசவாத ஆராய்ச்சியில் ஈடுபட்டு சித்தர்கள் கூறிய பல்வேறு ரசவாத மருந்துகளை செய்து ஆய்வில் ஈடுபட்டு வந்தனர் அதில் ஒருவர் காரைக்குடியைச் சேர்ந்தவர் இன்னொருவர் அவிநாசி சேர்ந்தவர். பல வருடங்களாக ஏராளமான மருந்துகள் செய்து வந்த ஆய்வில் ஒரு வெற்றியை கூட அடைய இயலவில்லை.

அப்போது அவிநாசியைச் சேர்ந்த இரசவாத ஆய்வாளருக்கு ஒரு மகானுடைய தொடர்பு ஏற்பட்டுள்ளது அப்போது அந்த மகான் இவருக்கு ஒரு இரசவாத மருந்து செய்முறை இரகசியத்தை உபதேசித்துள்ளார் அது காரைக்குடியை சேர்ந்த அவரின் நண்பரான இரசவாதிக்கு தெரியாது.

பின்பு அவிநாசி இரசவாதி அந்த மகான் கூறிய இரசவாத மருந்தை செய்து *வெற்றி அடைந்து, வீடுகள் கட்டி வசதி வாய்ப்பாக* வாழத் தொடங்கி உள்ளார் இது காரைக்குடி இரசவாதிக்கு மிகுந்த வியப்பை ஏற்படுத்தியுள்ளது எப்படி நமது நண்பர் வசதி வாய்ப்பை பெற்றுள்ளார் என்று புரியவில்லை இதை அவரிடமே கேட்டு உள்ளார் ஆனால் அவர் இதற்கு சரியான பதிலை அளிக்கவில்லை.

 Imayagiri Siddhar: பின்பு சில வருடங்கள் கழித்து காரைக்குடி இரசவாதி வேண்டிக் கேட்டுக் கொண்டதன் பேரில் அவர் மனம் இரங்கி அவரிடம் இதை ஒரே ஒருமுறை நேரில்  வேதை ஆகும் முறையை மட்டும் செய்து காண்பிக்கின்றேன் என்று கூறி வீட்டினுள் சென்று ஒரு பாட்டிலை எடுத்து வந்துள்ளார்.

 *அதில் இளம் மஞ்சள் நிறத்தில் ஒரு மருந்து பொடியாக இருந்துள்ளது பின்பு அதிலிருந்து 5 கிராம் எடை எடுத்து ஒரு கல்வத்தில் போட்டு பாதரசம் சுத்தி செய்தது 5 கிராம் எடுத்து இதனுடன் சேர்த்து அரைக்க சொல்லியுள்ளார். காரைக்குடி இரசவாதி அரைத்துள்ளார் சிறிது நேரத்தில் அவை இரண்டும் உறவாகியுள்ளது. ஆனால் கருப்பாக ஆகவில்லை பின்பு நைட்ரிக் ஆசிட் எடுத்து இதில் சிறிது ஊற்றி உள்ளார் அந்த பாதரச மருந்து பொங்கவில்லை. பின்பு வீட்டினுள் சென்று சிறிது சோற்றுப்பு எடுத்து வந்து இதில் போட்டுள்ளார் அப்போது பொங்கி உள்ளது. அது அடங்கியவுடன் அந்த ஆசிட் நீரை வடித்து கீழே உள்ள பாதரச மருந்து செந்தூர நிறத்தில் இருந்துள்ளது இதை ஒரு பீங்கான் தட்டில் போட்டு வெயிலில் வைத்துள்ளார்.*

*நன்கு காய்ந்த பிறகு எடுத்து கல்வத்திலிட்டு பொடித்து  இரண்டு கிராம் எடுத்து இரண்டு கிராம் தாய் சேர்த்து ஒரு முசையில் போட்டு ப்ளேயரில் வைத்து மெதுவாக ஊதி எடுத்து உருக்கி சாய்க்க மூன்றரை கிராம் சொக்கமாக இருந்துள்ளது. இதை பார்த்தவுடன் காரைக்குடி ரசவாதி அவினாசி ரசவாதியின் காலில் விழுந்து அந்த மருந்து என்ன என்று மன்றாடி கேட்டு உள்ளார். ஆனால் அவர் கூற மறுத்து ஒன்றை மட்டும் சொல்லுகிறேன் அதை வைத்து இதன் ரகசியத்தை அறிந்துகொள் என்று சொல்லி அந்த மருந்து 🌸*கோசாயி கந்தகம்* 🌸ஆகும். இதை உன் அறிவைக் கொண்டு கண்டுபிடித்து வாழ்வில் வளம் ஆகிக் கொள் என்று சொல்லி அவரை  அனுப்பிவிட்டார்.*

🌸 *இது கதை அல்ல. இரசவாத ஆய்வில் தடுமாறி நிற்கும் இரசவாதிகளின் வாழ்வில் ஒளி ஏற்றும் நடந்த உண்மைச் சம்பவம்.*🌸

நன்றி
*இமயகிரி சித்தர்*
அகத்தியர் குருகுலம் யோக ஞான பீடம்
திருச்சி - திண்டுக்கல்

Comments

  1. நம் நாட்டில் naraya வறுமை உள்ளது இதனை பயன்படுத்தி நன்மை செய்யும் போது சந்தோசம் தானே

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெங்கார பற்பம்

படிகார பற்பம் (அனுபவ முறை)

லிங்க செந்தூரம்