சுரபிகள்

வணக்கம்

சுரப்பிகள் பற்றிய எனது அநுபவ ரீதியான புரிதல்களை பகிர்கிறேன்.மாற்றுக்கருத்துள்ளவர்கள் தவிர்த்துவிடலாம்.

நமது உடலிலுள்ள நாளமுள்ள மற்றும் நாளமில்லா சுரப்பிகளுக்கு உத்தரவுபோடும் நிலையில் நமது தலைமை செயலகமான மூளைதான் உள்ளது.சுரப்பிகள் இயங்காமைக்கு சுரப்பிகளை காரணம் காட்டுவதாலேயே மற்ற மருத்துவங்கள் பல நேரங்களில் தோற்கின்றன.உடலில் அந்த சுரப்பிகளின் தேவையை பெறும் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்பை கொண்டே மூளை அந்த குறிப்பிட்ட சுரப்பி சுரக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்கிறது.அந்த உறுப்பின் குறையை சரிசெய்தாலே சுரப்பி தன்வேலையை சரிவர செய்ய மூளை உத்தரவிடும்.மாறாக அந்த சுரப்பி சுரக்கவேண்டிய விஷயத்தை செயற்கையாக செலுத்தும் போது அந்த உறுப்பின் பழுது அதிகரிக்கிறது.
உதாரணமாக பெண்களின் கர்ப்பப்பை சினைபப்பை கோளாருகளுக்கு தைராய்டு சுரப்பி பழுது என்று கணிக்கின்றனர்.ஆனால் அந்த உறுப்புகளின் பிரச்சினைகளை சரியாக்கி தைராய்டு நார்மல் என்ற நிலையை பல பேருக்கு நான் வைத்தியத்தில் நிரூபித்துள்ளேன்.சித்த மருத்துவத்தில் மட்டுமே இந்த மாதிரியான நோய்கனித்தல் முறைகள் உள்ளன.காரணமின்றி காரியமில்லை என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.
உப்புசெந்தூரம் பற்றிய அநுபவ உண்மையை கூறுகிறேன்.ஜனாப் ஹக்கீம் பா.மு.அப்துல்லா சாயுபு அவர்களின் அநுபோக வைத்திய நவநீதம் மூன்றாம் பாகத்தில் லவண வீர செந்தூர முறைக்கு முன் இருக்கும் உப்பு செந்தூரமும் அதன் தீரும் நோய்களையும் கவணமாக படித்து பயன் படுத்த அதிகபலனையும் சிறந்தவைத்தியன் என்ற பெயரையும் பெறலாம்.லவணவீர செந்தூரத்தில் உள்ள வாதமுறையும் பலகுருமார்கள் பயன்பாட்டிலுள்ளதே.....நன்றி

சித்.வா.மனோகரன்
சங்ககிரி
மாநில இணைதலைவர்
சேலம் மாவட்ட தலைவர்
              T.S.M.A

Comments

Popular posts from this blog

வெங்கார பற்பம்

படிகார பற்பம் (அனுபவ முறை)

லிங்க செந்தூரம்