பிரண்டை துவயல்

குழுவினர் பலர் கேட்டு கொண்டதால் எனது மருத்துவ முன்னோடி அவர்கள் கூறிய மருத்துவ குணம் நிறைந்த பிரண்டை துவயல் முறை.

தேவையானவை

கனுநீக்கி முனைகளை சீவி(தோலை உரிக்க வேண்டாம்) துண்டுகளாக நறுக்கிய பிரண்டை 150 கிராம்
தக்காளி பெரியது 3 எண்
உளுந்து கடலைபருப்பு வகைக்கு 35 கிராம்
சிறிய வெங்காயம் 150 கிராம்
பூண்டு 50 கிராம்
தனியா 25 கிராம்
இஞ்சி நறுக்கியது 35 கிராம்
மிளகு சீரகம் வகைக்கு 10 கிராம்
கருவேப்பிலை மல்லிதழை புதினா சிறிதளவு
உப்பு தேவைக்கு
வரமிளகாய்  5 எண்
பசு நெய் 50 மிலி

செய்முறை

உளுந்து கடலைபருப்பு இரண்டையும் எண்ணையின்றி சட்டியிலிட்டு தனித்தனியாக பொன்னிறத்தில் வருத்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.பிரண்டையை நெய்விட்டு பழுப்பு நிறம் வரும்வரையில் வதக்கவும்.முழு தக்காளிகளை நெய்விட்டு தோல் உரிந்து வேகும் அளவிற்கு வதக்கவும்.பிறகு வெங்காயத்தை நெய்யில் இட்டு வதங்கியவுடன் வரமிளகாய் பூண்டு இஞ்சி முதலியவற்றை இட்டு வதங்கியவுடன் தேவையான உப்பு சேர்த்து பின் கருவேப்பிலை புதினா முதலியவற்றை சேர்த்து வதக்கி கடைசியாக தனியா மிளகு சீரகத்தை சேர்த்து வதக்கி இறக்கி வைத்து ஆறியவுடன் தேவைக்கு புளி பச்சை மல்லி தழையும் சேர்த்து அனைத்தையும் உரலிலோ அல்லது மிக்ஸியிலோ அரைத்து சுடு சாதத்தில் பிசைந்து சாப்பிட தேவாமிர்தம் போன்றிருக்கும்.

மருத்துவ பயன்கள்.

திருமணமான இருபாலருக்கும் ஏற்படும் விந்திழப்பு நாத இழப்புகளை சரிசெய்து இளமையை பேனும்.
எலும்புகளை வலுவாக்கும்
வயிற்றுபுண்களை ஆற்றி சீரண மண்டலத்தை வலுவாக்கி பசியை தூண்டும்.இன்னும் பல குணங்களை தரும்.

வாரம் இரண்டு அல்லது ஒரு முறையாவது செய்து பயன் படுத்தவும்

நளபாகத்தில் சிறந்து விளங்கினால் மட்டுமே மருந்து செய்முறைகளில் நல்ல தேர்ச்சி கிடைக்கும். செய்முறை படங்கள் சில உடன் இனைத்துள்ளேன்.

பாரம்பரியம் காப்போம்

வா.மனோகரன்
சங்ககிரி.
பாரம்பரிய சித்த மருத்துவர்
முப்பு ரசவாத கற்ப ஆய்வாளர்.

Comments

Popular posts from this blog

வெங்கார பற்பம்

படிகார பற்பம் (அனுபவ முறை)

லிங்க செந்தூரம்