பிரண்டை உப்பு தயாரிக்கும் முறை

அனைத்து சகோதரர்களுக்கும் ஆத்ம நமஸ்காரம்

ஏற்கெனவே இந்த பதிவு  இருக்கிறது .
இஇருப்பினும்  ஒரு ஆத்ம நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த பதிவு

உப்பு எடுக்க முற்றிய பிரண்டை அதிகம் சேகரித்து படத்தில் உள்ளபடி சிறியதாக நறுக்கி வெயிலில் காய வைத்து  ஒரு இரும்பு சட்டியில் போட்டு தீயெரிக்க வேண்டும். சட்டியின் மேல் புகை வரும் போது அந்த பிரண்டை மேல் தீவைக்க சாம்பல் திருநீறு போல் வெண்மையாக வரும்.

மறுநாள் அந்த சாம்பலை அளந்து அதற்கு நான்கு பங்கு தண்ணீர் ஊற்றி தினமும் ஐந்து முறை மூங்கில், கலக்கி வர வேண்டும்.  ஐந்தாம் நாள் தெளிவான நீரை எடுத்து வடிகட்டி இரும்பு சட்டியில் வைத்து சிறுதீயாக எரித்து வர வேண்டும்.

தண்ணீர் வற்றிய குழம்பு பருவத்தில்  எடுத்து மறு சட்டியில் வைத்து வெயிலில் வைக்க வெண்ணிறமான  உப்பு கிடைக்கும். அதை எடுத்து பீங்கான் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் பத்திரப்படுத்தவும்.

பெண்களுக்கு மாதவிலக்கு நேரத்தில் வரும் வயிற்று வலிக்கு ஒரு அரிசி அளவு சோடா அல்லது வென்னீரில் கொடுக்க வயிற்று வலி நிற்கும்

அதே போல் ஆண் பெண் இருவருக்கும் வாயு சம்பந்தமான வயிற்று வலிக்கும் அதே போல் கொடுக்கலாம்.

அதேபோல் கால்சியம் சத்து குறைபாடு இருந்தால் முற்றிய பிரண்டையைப் பால் விட்டவித்து வெயிலில் காய வைத்து பொடி செய்து அந்த பொடி மூன்று விரலால் அள்ளும் அளவு எடுத்து அதில் ஒரு அரிசி  அளவு  பிரண்டை உப்பு சேர்த்து தேனில் குழப்பி, வர கால்சியம் குறைபாடு நீங்கும்

அதை நெய்யில் குழப்பி சாப்பிட்டு வர மூலம் சம்பந்தப்பட்ட பிரச்சனை தீரும்.

படத்தில்  இருக்கும் இளம் பிரண்டையைப் துவையல் செய்து சாப்பிட்டு வர பசி அதிகரிக்கும். மேற்கண்ட நோய்கள் தீரும்.

பிரம்மஸ்ரீ கோவிந்தன்
சுவாமி சிவானந்தா சித்த வைத்தியசாலை
மம்சாபுரம் கிராமம்
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா
விருதுநகர் மாவட்டம
கைபேசி  9345168097  8098818262

பிரண்டை முற்றியதும்   தளிரும்

Comments

Popular posts from this blog

வெங்கார பற்பம்

படிகார பற்பம் (அனுபவ முறை)

லிங்க செந்தூரம்