இலிங்க மெழுகு

வணக்கம்

இலிங்க மெழுகு
==============
ஒருபலம் சுண்ணாம்பில் வைத்து எரித்தெடுத்து சுத்தி செய்த இலிங்கம்.
200 மிலி திரமான சாராயம்
200 மிலி பூண்டு இடித்துபிழிந்த சாறு.
இலிங்கத்தை ஓட்டில் வைத்து சூடு கண்ட உடன் மேற்சொன்ன இருதிரவங்களையும் மாற்றி மாற்றி சுருக்கிட கொப்பளித்து வருவதுபோல் மெழுகு வரும் அதை இரும்பு கம்பியில் சுழற்றி எடுத்து சேகரித்துக்கொள்ளவும்.பின் அந்த சேகரித்தமெழுகை ஒன்று சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

இரண்டு மிளகளவு தர உடலிலுள்ள வாயுக்கள் கலைந்து ஆசனத்தில் வெளிப்பட்டு போகும்.குடலிறக்க நோயில் சிறப்பாக வேலை செய்யும்.
வாதமுறை
==========
10கிராம் செம்பை உருக்கி கண்விட்டாடும்போது ஒருகிராம் மெழுகை கொடுக்க வாங்கும்.பின்பலமுறை உருக்கி மட்டத்திற்கான இலக்கணத்தை அந்த செம்பு அடையும்போது சம அளவு தங்கத்தை கொடுத்து ஊட்டமும் வர்ணமும் வரும்வரை மடக்கி மடக்கி உருக்கி எடுக்க சிவதரிசனமாம்.........நன்றி

சித்.வா.மனோகரன்
சங்ககிரி
மாநில இணைதலைவர்
சேலம் மாவட்ட தலைவர்
              T.S.M.A

Comments

Popular posts from this blog

வெங்கார பற்பம்

படிகார பற்பம் (அனுபவ முறை)

லிங்க செந்தூரம்