சர்வ சுரக் குடிநீர் (எ)நிலவேம்பு குடிநீர்
சர்வ சுரக் குடிநீர் (எ) நிலவேம்பு குடிநீர் அனுபவமுறை:
01. நிலவேம்பு சமூலம்
02. பற்பாடகம்
03. சீந்தில் தண்டு
04. சிறு காஞ்சோரி வேர்
05. விஷ்ணு காந்தி
06. பேய் புடல் (அ) பாகல்
07. வேப்பம் பட்டை
08. கோரைக்கிழங்கு (எ) முத்தக்காசு
09. வெட்டி வேர்
10. மிளகு
11. சுக்கு
12. திப்பிலி
13. திப்பிலி மூலம்
14. கோஷ்டம்
செய்முறை: மேற்கண்ட 14 பொருட்களையும் சேகரித்து ஒன்றிரண்டாய் இடித்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
பிரயோகம்: ஒரு கைப்பிடி மருந்தை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து அரை லிட்டராகும் வரை காய்ச்சி வைத்துக் கொள்ளவும். சுரம் வந்தவர்களுக்கு மூன்று மணிக்கு ஒரு முறை மேற்கூறிய கஷாயத்தை 30ml புகட்டவும். மிக விரைவாக அதிசயிக்கும் படி அனைத்து சுரங்களும் குணமாகிவிடும்.
குறிப்பு: சுரம் கண்டவர்களுக்கு மேற்கண்ட மருந்தோடு அன்னபேதி செந்துரம், லிங்க செந்தூரம், வஜ்ரகண்டி மாத்திரை, சண்டமாருத செந்தூரம், வான் மெழுகு முதலான மருந்துகளையும் கூட தேவைக்கேற்ப பிரயோகித்தால் மேலும் சிறப்பான குணங்களை பெறலாம்.
நன்றி,
பிரேம், ஓசூர்
SMF, பொதுச் செயலாளர்
ஸ்ரீல ஸ்ரீ பிரம்ம ரிஷி குரு மஹா சன்னிதானம்,
தலைமை சித்தர் பீடம்.
Comments
Post a Comment