படிகார பற்பம் (அனுபவ முறை)

படிகார பற்பம் (அனுபவ முறை)

படிகாரம் – ½ கிலோ
இளநீர்  – 2 லிட்டர்
யானை நெரிஞ்சில் – தேவையான அளவு

முதலில் படிகாரத்தை மழை தண்ணீரில் கரைத்து ஒரு முரட்டு துணியில்  வடிகட்டி கொதிக்கவைத்து உறையும் பக்குவத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் பார்க்க சுத்தமான படிகாரம் கிடைக்கும்.

இளநீரில் யானை நெரிஞ்சிளை போட்டு துழவிக் கொண்டு வர அந்த இளநீர்  குழகுழப்பகவும் மாறும்(இது வைத்தியர்கள் அறிந்ததே). அதை அப்படியே படிகாரத்தை கடாயிலிட்டு அதில் இந்த இளநீரை விட்டு கொதிக்க வைத்து சாறு சுண்டிய உடன் மேலும் எரிக்க படிகாரம் பற்பமாகும். இந்த படிகாரத்தை ஒன்று ரெண்டாக உடைத்து கடாயில் நன்றாக வறுத்து மீண்டும் நெகிழ அரைத்து பத்திரப் படுத்தவும்.

அளவு : 100 மில்லி கிராம் முதல் 3௦௦ மில்லி கிராம் வரை

அனுபானம் : மோர், பால், வெண்ணை, நெய், வாழை பூ சாறு, நீர்முள்ளி கசாயம், முள்ளங்கி சாறு, நெரிஞ்சில் கசாயம், இளநீர்  மேலும் பல ...  

பயன்கள் : வெள்ளை, வெட்டை, குன்மம், சிறுநீரில் ரத்தம் வருதல், பித்த மயக்கம், உடல் எரிச்சல், நீர்க்கட்டு, நீர் கடுப்பு, சதையடைப்பு, பெரும்பாடு, பித்த நோய்கள், இந்த படிகாரத்தை புண்களுக்கு வெண்ணையுடன் கலந்து மேல் பூச்சாகவும் பயன் படுத்தலாம்.

இந்த படிகார பற்பம் 300 மில்லி கிராம்
நெல்லிக்காய் சூரணம் ½ கிராம்
கற்கண்டு ½ கிராம்

இம்மூன்றையும் அரைத்து சதாவரி நெய்யில் கொடுக்க அடுத்து வரும் சிறுநீரில் இரத்தம் கானது. அனுபவம்.

பெரும்பாடுக்கு:

இந்த படிகார பற்பம்
காசுகட்டி
கடுக்காய் பிஞ்சு
படிகார பூங்காவி செந்தூரம்

சமம் சேர்த்து அரைத்து திரிகடி அளவு 4 மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்க 1 நாளில் நிற்கும். 3 நாள் வரை கொடுக்கலாம்.

பெரும்பாடுக்கு அனுபானம் : வாழை பூ சாறு அல்லது கொம்பரக்கு குடிநீர்.
                                   
மேலும் அளவும், அனுபானமும் நோயை பொருத்து கூட்டியும், குறைத்தும் அனுபானத்தை மாற்றியும் புத்தியை பயன்படுத்துவது மருத்துவரின் கடமை.    

படிகார பற்பத்தில் உயர்ந்த முறைகளில் இதுவும் ஒன்று.

நன்றி,

மேலும் பயணிப்போம் . . .

J.லோகேஷ் குமார்,
வேலூர்.

Comments

  1. உங்களது அலைபேசி எண் தாருங்கள் நண்பரே

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெங்கார பற்பம்

லிங்க செந்தூரம்