கல்லுப்பு

வணக்கம்

கல்லுப்பு
========
பொதுவாக கல்லுப்பு என்பது ஒரு உயரிய பொருள் என்பதில் மாற்று கருத்து இல்லை.இடத்திற்கு தக்கவாறு சித்தர்கள் மாற்றி மாற்றி கூறி நம்மை சிந்திக்க வைத்து செம்மை படுத்துகின்றனர்.

1,கல்சுண்ணாம்பை எட்டு நீர்விட்டு நீற்றி கலக்கி கலக்கிவிட்டு நான்காம் நாளிலிருந்து தெளியவிட்டு மேலே படியும் உப்பை கவனமாக தினம்தோறும் சேமித்து காயவைத்து எடுக்க கல் உப்பு என பெயர் பெறும்.பாஷானங்களை கட்ட இது பயன்படும்.இதை நேரடியாக உள்ளுக்கு சாப்பிட கூடாது.

2,சோற்றுப்பு விளையும் உப்பளங்களில் இரண்டடிக்கு கீழுள்ள உப்பை கல்லுப்பு என்று இருபது வருடங்களுக்கு முன் கடைகளில் விற்று வந்தனர்.தற்சமயம் கிடைப்பதில்லை.இதை கட்டனால் இரசத்தை கட்டும்.

3,சோற்றுப்பை பல வழிகளில் கட்டலாம்.இதில் ஒரு சூட்சுமம் உள்ளது. பஞ்ச பூத மூலிகைகளை கொண்டு ஐந்துவிதமாக கட்டலாம்.இதில் நம் தலைப்புக்கு பொருந்தும் கல்லுப்பு இலக்கண கட்டைமற்றும் கவனிப்போம்.நாட்டு நிலாவரை மூலியமாக கட்டிய சோற்றுப்பு நீர்பூத கட்டாகும்.அது நீரினில் கரையாது.சுவை இருக்காது.நெருப்பினில் உருகும்.
கல்லுப்பென்றால் கரைந்திடா நீரினில் கொல்லுமே சூத வேதைக்காகும்.....என்ற வாக்கிற்கு பொருந்தும்கட்டு.

4, மெய்பொருளினின்று குறிப்பிட்ட முறையில் கிடைக்கும் உப்பு கல்லுப்பென்ற நாமம் பெறும்.இதுவே முப்பு இதை சுண்ணமாக்கினால் அந்த சுண்ணம் சாதாரண சுண்ணத்தைபோல நீர்பட்ட உடன் தன்னுள் உள்ள ரகசிய நெருப்பை மலர்ந்து வெளிப்படுத்தாது.அதுவே நம்மை மரணமில்லா பெருவாழ்விற்கும் இரசத்தை நொடியில் தங்கமாக மாற்றவும் வல்லதாம்.ஆய்வில் ஒவ்வொருவருக்கும் ஒருபொருள் மெய்பொருள்.இந்த நிலையை அவர்களின் மெய்பொருளின் மூலமடைந்தால் அது உண்மையான அகரமென்று ஏற்றுக்கொள்ளலாம்.......நன்றி

ஶ்ரீ ல ஶ்ரீ கொங்கணவர் மகா சந்நிதானம்
வா.மனோகரன்
சங்ககிரி.
மாநில இணைதலைவர்
சேலம் மாவட்ட தலைவர்
T.S.M.A,..S.M.F

Comments

Popular posts from this blog

வெங்கார பற்பம்

படிகார பற்பம் (அனுபவ முறை)

லிங்க செந்தூரம்