நீர் கட்டினால் வீக்கமடைந்து இருப்பதற்கு தீர்வு

வணக்கம்

உடல் நீர் கட்டினால் வீக்கமடைந்து இருப்பதற்கு மருந்து.

வெள்ளாட்டுசிறுநீரை நன்கு துணியில் வடிகட்டி வெய்யிலில் உலர்த்தி எடுத்த உப்பு 18 கிராம்
சுத்தி பூநீறு அல்லது மாவு சோடா 72 கிராம்
நவசாரம் 72 கிராம்
இது மூன்றையும் குழம்பு பதமாக எலுமிச்சை சாறுவிட்டு அரைத்து பனியில் வைத்து தெளியும் ஜெயநீரை இருத்துக்கொள்ளவும்.
பெருங்கம்பிகளான வெடியுப்பு 72 கிராம் கொண்டுவந்து மேற்கண்ட ஜெயநீரில் தோய்த்து நன்கு வெய்யிலில் காயவைக்கவும்.இதே போல் 9 பாவனைசெய்து உலர்த்தவும்.பின் பூவரசம் பழுப்பு இலைகளை ஒருமண்சட்டியில் 3 விரற்கணம் பரப்பி அதன்மீது பக்குவப்படுத்தப்பட்ட வெடியுப்புகம்பிகளை வைத்து மேலும் பூவரசன் பழுப்புகளை போட்டு அழுத்தி அடுப்பின் மீது வைத்து மூலிகை சாம்பலாகும்வரை எரிக்க வெடியுப்பு உருகிஇருக்கும்.பிறகு அதை நீர்விட்டு அரைத்து துணியில் வடிகட்டி சட்டியிலிட்டு எரிக்க உறைந்து பற்பமாகும்.

துவரையளவு பற்பத்தை இளநீர் நெருஞ்சிமுள் குடிநீர் முள்ளங்கிசாறு இவற்றில் ஏதோ ஒன்றில் சாப்பிட நன்கு நீர்பிரிந்து கல்லடைப்பு சதையடைப்பு ஆகியவை நீங்கி உடலின் நீரேற்றம் வடிந்து வீக்கம் குணமாகும்.இது ஓர் சிறந்த அநுபவ மருந்து.
திணம் இரு வேளை.

நூல் ஆதாரம்; கண்ணுசாமிப்பரம்பரை வைத்தியம்.

வா.மனோகரன்
சங்ககிரி.

Comments

Popular posts from this blog

வெங்கார பற்பம்

படிகார பற்பம் (அனுபவ முறை)

லிங்க செந்தூரம்