இரசவாதத்தின் அடிப்படை விளக்கம்

இரசவாதத்தின் அடிப்படை விளக்கம்.

சித்தர்கள் வழி முறைப்படி இரசவாதம் செய்து முடிக்க வேண்டுமென்றால் இதற்கான அடிப்படை இரகசியங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

சாரம் விட்டால் செயநீர் போச்சு
உப்பை விட்டால் கட்டு போச்சு
கெந்தி விட்டால் வர்ணம் போச்சு
துரிசு விட்டால் குருவே போச்சு
இரசம் விட்டால் வாதம் போச்சு

அதாவது :
நவச்சாரம் இல்லாமல் செயநீர் ஆகாது.
வெடியுப்பு இல்லாமல் பாசாணங்கள் கட்டு ஆகாது
கெந்தகம் இல்லாமல் உலோகங்களில் வர்ணம் ஏறாது
துரிசு இல்லாமல் குரு மருந்து முடியாது (இரசவாத குரு)
பாதரசம் இல்லாமல் இரசவாதம் முடியாது.

மேலும் புளியைக் கொண்டு உப்பைக் கட்டு என்பதற்கிணங்க உப்பு சரக்குகளிலும், பாசாணசரக்குகளிலும், உலோகங்களிலும் உப்பு, புளி சரக்குகள் அறிய வேண்டும்.

சத்ருவால் கொன்று மித்ருவால் உயிரெழுப்பு என்பதற்கிணங்க சத்ரு, மித்ரு சரக்குகள் அறிய வேண்டும்.

உருகினத்தாதி தெரிய வேண்டும். அதாவது உலோகங்கள் சுலபமாக உருகச் செய்யும் குருமருந்து ஆகும்.

வெட்டை தணிக்கும் குரு தெரிய வேண்டும். அதாவது செம்பு, வெள்ளி போன்ற உலோகங்களில் நாம் மருந்துகள் கொடுக்கும் போது அவை வெட்டையாகி விடும். அதாவது அந்த உலோகத்தை சுத்தியல் கொண்டு தட்டும் போது அவை நைப்பாக இல்லாமல் வெடிப்பு, மற்றும் நொருங்கினால் அந்த உலோகத்தில் வெட்டை குருமருந்தை உருக்கு முகத்தில் கொடுக்கும் போது மீண்டும் அந்த உலோகம் நைப்பாகி விடும்.

இது தான் இரசவாதத்திற்கு அடிப்படை ஆகும். சித்தர்கள் வழி முறையில் மேற்கண்டவைகளை தெளிவாக அறிந்து கொண்ட பிறகு தான் இரசவாதம் செய்ய முடியும்.

ஆனால் மரபு வழி அனுபவ முறைகளிலும், சாது, சன்னியாசி, பகிராகி சாமியார்கள் முறையில் மிக எளிதாக இரசவாதம் செய்து முடித்ததாக பலர் கூறக்கேட்டும், கண்டுமுள்ளோம்.

அவைகளை ஒவ்வொன்றாய் பார்ப்போம்.

நன்றி.🙏
*இமயகிரி சித்தர்*
அகத்தியர் குருகுலம் யோக ஞான பீடம்
திருச்சி - திண்டுக்கல்

Comments

Post a Comment

Popular posts from this blog

வெங்கார பற்பம்

படிகார பற்பம் (அனுபவ முறை)

லிங்க செந்தூரம்