அமிர்த கரணம்
வணக்கம் அமிர்த கரணம் ============= இது ஒருமுக்கியமான விஷயம்.நம் சித்தர் கலையின் உச்சகட்ட முறை இது.என்ன செய்ய காலத்தின் கோலம்.இதை ஆயுர்வேதம் தங்கள் முறை எனக்கூறி இதை செய்து விஞ்ஞான பூர்வ விளக்கமளித்து அவர்கள் இந்நாட்டின் மருத்துவ முறையே ஆயுர்வேதம்தான் என்பது போல மாயதோற்றத்தை உண்டாக்குகின்றனர். நம் சித்த மருத்துவத்தில் மட்டும்தான் அமிர்தம் அதன் மூலம் மரணமில்லா பெருவாழ்வு என்ற கருத்தியல் இருக்கிறது.நம் சித்தமருத்துவர்களே இதை பற்றி பெரிதாக எடுத்து கொள்வதில்லை என்பதே வருத்தமான விஷயம்தான்.எனவே நான் ஆய்வுசெய்து உணர்ந்த விஷயத்தை நம்பாரம்பரியத்திற்காக பகிர்கிறேன். அமிர்த கரணம் இரண்டு வகைப்படும். 1,காரமான சுண்ணம், செந்தூரம்,பற்பம் இவைகளை அதன் எடைக்கு நான்குபங்கு பசுநெய் விட்டு ஒருநாள் வைத்திருந்து பார்க்க நெய்முறிந்து நீராக இருக்கும்.நெய் இந்நிலையை அடைந்தால் மட்டுமே இந்த அமிர்தகரணம் பயன்படும்.பிறகு இதை அடுப்பேற்றி சூடுசெய்து நீரானநெய் சுண்டி வரலாக ஆனபின் அதை கல்வத்தில் அரைத்துபத்திரபடுத்தவும்.இதன் செயல் அளவிடற்கரியதாக இருக்கும். 2,காரமின்றி சாந்தமாக உள்ள சுண்ணம்,செந்தூரம்,பற்பம்...