Posts

Showing posts from November, 2018

ஒற்றை தலைவலிக்கு

நண்பர்களுக்கு வணக்கம். வீட்டில் பரம்பரையாக ஒற்றை தலை வலிக்கு எங்க பாட்டி  3  நாள் மருந்தில் குணமாகும். மீண்டும் ஒற்றை தலை வலி வந்ததில்லை. தற்போது பாட்டிக்கு பிறகு எங்க அம்மா இந்த மருந்தை கொடுக்கிறார். ஒரே தடவையில் குணமாகி போனவர்களும் உண்டு. ஒற்றை தலைவலிக்கு எதிர் புரம் காதில் மருந்து விடுவார்கள். காலையில் வெறும் வயிற்றில். யாரிடமும் பேசக் கூடாது. மருந்து விட்ட பிறகு யாரிடம் முதலில் பேசுகிறார்களே அவர்களுக்கு தலைவலி போய்விடும் என்று சொல்லி மருந்து விடுவார்கள். எனக்கு 2 வருடங்களுக்கு முன்பு தான் தெரியும் அந்த மருந்து. குழுவினர்க்கு அந்த மருந்து... துளசி இலை - 10எண்ணிக்கை உப்பு கள் - 1 கையில் நுனுக்கிய சாறு 2 சொட்டு தலை வலிக்கு எதிர் புரம் காதில் தொடர்ந்து 3 நாள் விட ஒற்றை தலைவலி வராது... குடும்ப அனுபவ முறை... பாரிச வாதத்தை 2 பத்தியத்தில் குணமாக்கும் பரம்பரை முறையை அடுத்த பதிவில் பார்ப்போம். நன்றி, மேலும் பயணிப்போம்... J.லோகேஷ் குமார், வேலூர்.

தேரையர் களிம்பு

திரு ஆத்மஜோதி கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்களின் தலைமையில் இயங்கிவந்த தமிழ் பண்பாட்டு சித்தமருத்துவ அறிவு ஆய்வகத்தின் தலைமை குருவாகிய பேராம்பட்டு தெய்வத்திரு P.R.கிருட்டிணன் ஜயா அவர்களின் அனுபவ ராஜகளிம்புமுறை. தேவையான பொருட்கள் ===================== இலிங்கம் 16.5 கிராம் இரச கற்பூரம் 25 கிராம் மிருதார்சிங்கி 25 கிராம் பால்துத்தம் 25 கிராம் மயில்துத்தம் 6 கிராம் குங்கிலியம் 100 கிராம் தேங்காய் எண்ணெய் 500 மிலி தண்ணீர் 2.5 லிட்டர் பஷாண சரக்குகளை சுத்திசெய்து வரிசைப்படி அரைத்து உறவான உடன் 3 சாமம் அரைத்து வைத்துக்கொள்ளவும்.தேங்கா எண்ணையில் குங்கிலியத்தை பொடித்து போட்டு சூடாக்கி குங்கிலியம் நன்கு கரைந்தபின் இரும்புவடியில் வடிக்கவும்.உடன் அரைத்துவைத்த பாஷாண சரக்குகளை அதிலிட்டு கரண்டியால் உறவுபட கலக்கவும்.பிறகு தண்ணீரை அளவுபடி ஊற்றி மத்தால் நன்கு கலக்கி கைபொருக்கும் பதத்தில் கையால் நன்கு அரைமணிநேரம்வரை கலக்கவும்.மருந்துதயார். தீரும் நோய்கள் இது வெளிப்பிரயோக களிம்பு. சேற்றுப்புண்,கால்பித்தவெடிப்பு வண்டுகடி அறைகளில் வரும் அரிப்பு தீப்புண் வெட்டுக்காயம் சர்க்கரைநோய்ப்புண் முகப்பரு தல...
சர்வ சுரக் குடிநீர் (எ) நிலவேம்பு குடிநீர் அனுபவமுறை: 01. நிலவேம்பு சமூலம் 02. பற்பாடகம் 03. சீந்தில் தண்டு 04. சிறு காஞ்சோரி வேர் 05. விஷ்ணு காந்தி 06. பேய் புடல் (அ) பாகல் 07. வேப்பம் பட்டை 08. கோரைக்கிழங்கு (எ) முத்தக்காசு 09. வெட்டி வேர் 10. மிளகு 11. சுக்கு 12. திப்பிலி 13. திப்பிலி மூலம் 14. கோஷ்டம் செய்முறை:  மேற்கண்ட 14 பொருட்களையும் சேகரித்து ஒன்றிரண்டாய் இடித்து கலந்து வைத்துக் கொள்ளவும். பிரயோகம்: ஒரு கைப்பிடி மருந்தை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து அரை லிட்டராகும் வரை காய்ச்சி வைத்துக் கொள்ளவும். சுரம் வந்தவர்களுக்கு மூன்று மணிக்கு ஒரு முறை மேற்கூறிய கஷாயத்தை 30ml புகட்டவும். மிக விரைவாக அதிசயிக்கும் படி அனைத்து சுரங்களும் குணமாகிவிடும். குறிப்பு: சுரம் கண்டவர்களுக்கு மேற்கண்ட மருந்தோடு அன்னபேதி செந்துரம்,  லிங்க செந்தூரம், வஜ்ரகண்டி மாத்திரை, சண்டமாருத செந்தூரம், வான் மெழுகு முதலான மருந்துகளையும் கூட தேவைக்கேற்ப பிரயோகித்தால் மேலும் சிறப்பான குணங்களை பெறலாம். நன்றி, பிரேம், ஓசூர் SMF, பொதுச் செயலாளர் ஸ்ரீல ஸ்ரீ பிரம்ம ரிஷி குரு ம...

நீர் கட்டினால் வீக்கமடைந்து இருப்பதற்கு தீர்வு

வணக்கம் உடல் நீர் கட்டினால் வீக்கமடைந்து இருப்பதற்கு மருந்து. வெள்ளாட்டுசிறுநீரை நன்கு துணியில் வடிகட்டி வெய்யிலில் உலர்த்தி எடுத்த உப்பு 18 கிராம் சுத்தி பூநீறு அல்லது மாவு சோடா 72 கிராம் நவசாரம் 72 கிராம் இது மூன்றையும் குழம்பு பதமாக எலுமிச்சை சாறுவிட்டு அரைத்து பனியில் வைத்து தெளியும் ஜெயநீரை இருத்துக்கொள்ளவும். பெருங்கம்பிகளான வெடியுப்பு 72 கிராம் கொண்டுவந்து மேற்கண்ட ஜெயநீரில் தோய்த்து நன்கு வெய்யிலில் காயவைக்கவும்.இதே போல் 9 பாவனைசெய்து உலர்த்தவும்.பின் பூவரசம் பழுப்பு இலைகளை ஒருமண்சட்டியில் 3 விரற்கணம் பரப்பி அதன்மீது பக்குவப்படுத்தப்பட்ட வெடியுப்புகம்பிகளை வைத்து மேலும் பூவரசன் பழுப்புகளை போட்டு அழுத்தி அடுப்பின் மீது வைத்து மூலிகை சாம்பலாகும்வரை எரிக்க வெடியுப்பு உருகிஇருக்கும்.பிறகு அதை நீர்விட்டு அரைத்து துணியில் வடிகட்டி சட்டியிலிட்டு எரிக்க உறைந்து பற்பமாகும். துவரையளவு பற்பத்தை இளநீர் நெருஞ்சிமுள் குடிநீர் முள்ளங்கிசாறு இவற்றில் ஏதோ ஒன்றில் சாப்பிட நன்கு நீர்பிரிந்து கல்லடைப்பு சதையடைப்பு ஆகியவை நீங்கி உடலின் நீரேற்றம் வடிந்து வீக்கம் குணமாகும்.இது ஓர் சிறந்த அ...

சர்வ சுரக் குடிநீர் (எ)நிலவேம்பு குடிநீர்

சர்வ சுரக் குடிநீர் (எ) நிலவேம்பு குடிநீர் அனுபவமுறை: 01. நிலவேம்பு சமூலம் 02. பற்பாடகம் 03. சீந்தில் தண்டு 04. சிறு காஞ்சோரி வேர் 05. விஷ்ணு காந்தி 06. பேய் புடல் (அ) பாகல் 07. வேப்பம் பட்டை 08. கோரைக்கிழங்கு (எ) முத்தக்காசு 09. வெட்டி வேர் 10. மிளகு 11. சுக்கு 12. திப்பிலி 13. திப்பிலி மூலம் 14. கோஷ்டம் செய்முறை:  மேற்கண்ட 14 பொருட்களையும் சேகரித்து ஒன்றிரண்டாய் இடித்து கலந்து வைத்துக் கொள்ளவும். பிரயோகம்: ஒரு கைப்பிடி மருந்தை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து அரை லிட்டராகும் வரை காய்ச்சி வைத்துக் கொள்ளவும். சுரம் வந்தவர்களுக்கு மூன்று மணிக்கு ஒரு முறை மேற்கூறிய கஷாயத்தை 30ml புகட்டவும். மிக விரைவாக அதிசயிக்கும் படி அனைத்து சுரங்களும் குணமாகிவிடும். குறிப்பு: சுரம் கண்டவர்களுக்கு மேற்கண்ட மருந்தோடு அன்னபேதி செந்துரம்,  லிங்க செந்தூரம், வஜ்ரகண்டி மாத்திரை, சண்டமாருத செந்தூரம், வான் மெழுகு முதலான மருந்துகளையும் கூட தேவைக்கேற்ப பிரயோகித்தால் மேலும் சிறப்பான குணங்களை பெறலாம். நன்றி, பிரேம், ஓசூர் SMF, பொதுச் செயலாளர் ஸ்ரீல ஸ்ரீ பிரம்ம ரிஷி குரு ம...
Image
பிரண்டை உப்பு தயாரிக்கும் முறை அனைத்து சகோதரர்களுக்கும் ஆத்ம நமஸ்காரம் ஏற்கெனவே இந்த பதிவு  இருக்கிறது . இஇருப்பினும்  ஒரு ஆத்ம நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த பதிவு உப்பு எடுக்க முற்றிய பிரண்டை அதிகம் சேகரித்து படத்தில் உள்ளபடி சிறியதாக நறுக்கி வெயிலில் காய வைத்து  ஒரு இரும்பு சட்டியில் போட்டு தீயெரிக்க வேண்டும். சட்டியின் மேல் புகை வரும் போது அந்த பிரண்டை மேல் தீவைக்க சாம்பல் திருநீறு போல் வெண்மையாக வரும். மறுநாள் அந்த சாம்பலை அளந்து அதற்கு நான்கு பங்கு தண்ணீர் ஊற்றி தினமும் ஐந்து முறை மூங்கில், கலக்கி வர வேண்டும்.  ஐந்தாம் நாள் தெளிவான நீரை எடுத்து வடிகட்டி இரும்பு சட்டியில் வைத்து சிறுதீயாக எரித்து வர வேண்டும். தண்ணீர் வற்றிய குழம்பு பருவத்தில்  எடுத்து மறு சட்டியில் வைத்து வெயிலில் வைக்க வெண்ணிறமான  உப்பு கிடைக்கும். அதை எடுத்து பீங்கான் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் பத்திரப்படுத்தவும். பெண்களுக்கு மாதவிலக்கு நேரத்தில் வரும் வயிற்று வலிக்கு ஒரு அரிசி அளவு சோடா அல்லது வென்னீரில் கொடுக்க வயிற்று வலி நிற்கும் அதே போல் ஆண் பெண் இருவருக்கும்...

சிறுநீரக செயலிழப்பிற்கு சித்த மருத்துவம்

Image
சிறுநீரக  செயலிழப்பிற்கு  பூனை மீசை மூலிகை அனைத்து சகோதரர்களுக்கும் ஆத்ம நமஸ்காரம் சிறு நீரக செயலிழப்பிற்கு பல மூலிகை யுடன் சேர்த்து கசாயமாக மற்றும் தனி பொடியாகவும் வைத்தியர்கள் பயன்படுத்தி, வருகின்றனர். இம்மூலிகை கோடை காலத்தில் கிடைப்பது இல்லை.  ஆனால் எங்க ஊர் மம்சாபுரம் பகுதியில் சில நாட்களாக மழை பெய்து வருவதால் இந்த மூலிகை கிடைக்கிறது பூனை மீசை மூலிகை சக்தி சாரணை சிறு நெருஞ்சில் நீர் முள்ளி கண்ணுப்பீளை இம்மூலிகைகளை கசாயம் வைத்து காலை மதியம் இரவு என்று மூன்று வேளை சாப்பிடும் முன்பு குடித்து வர வேண்டும் அன்னபேதி வெடியுப்பு செந்தூத்தை காலை முள்ளங்கி சாற்றிலும் மாலை மேற்கண்ட கசாயத்திலும் சாப்பிட்டு வர வேண்டும் இந்துப்பு சாப்பாட்டில் அரைவாசி பயன்படுத்தி வர வேண்டும். முழங்காலிற்கு கீழ் வீக்கமாக  இருந்தால் நீர்முள்ளி சமூலத்தை சாம்பலாக்கி அதில் பசுவின் கோமியம் சேர்த்து வீக்கம் உள்ள இடத்தில் பூசவும். வயது  பார்த்து உடல் பலவீனத்திற்கு தகுந்தார் போல்  அரிஷ்டம் லேகியம் ஏதேனும் கொடுக்கலாம். பிரம்மஸ்ரீ கோவிந்தன் சுவாமி சிவானந்தா சித்த வைத...
Image
சப்பாத்தி கள்ளி அனைத்து சகோதரர்களுக்கும் ஆத்ம நமஸ்காரம் மூலிகை இனம் காணல் பயிற்சி யில் கண்டதில் சப்பாத்தி கள்ளி மூலிகையும் ஒன்று. உடம்பில் வரும் கட்டிகளுக்கு இதன் பூவின் இதழ்களை எடுத்து லேசாக ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி அனரத்து கட்ட சிறிய கட்டியாக இருந்தால் அப்படியே கரைந்து விடும். பெரிய கட்டியாக இருந்தால் வலி இல்லாமல் உடைந்து குணமாகும். சப்பாத்தி கள்ளிமடலின் முட்களை அகற்றி விட்டு நெருப்பில் வாட்டி காலில் வீக்கம் உள்ள பகுதியில் அரைத்து கட்ட  வீக்கம் வலி குறையும். படத்தில் இருக்கும் பழத்தை பாருங்கள். அதன் மேல் உள்ள முட்களை அகற்றி விட்டு பழத்தை சாப்பிட இரத்தம் அதிகரிக்கும். உடல் உஷ்ணம் குறையும். தண்ணீர் தாகம் குறையும். பிரம்ம ஸ்ரீ  கோவிந்தன் சுவாமி சிவானந்தா சித்த வைத்திய சாலை மம்சாபுரம் கிராமம் ஸ்ரீ வில்லிபுத்தூர் தாலுகா விருதுநகர் மாவட்டம் கைபேசி  9345168097                    8098818262 சப்பாத்தி கள்ளி மூலிகை.

வசம்பு என்னும் பிள்ளை வளர்த்தி

பிள்ளை வளர்த்தி என்னும் வசம்பு மூலிகை அனைத்து சகோதரர்களுக்கும் ஆத்ம நமஸ்காரம் வசம்பு மூலிகையை கிராமத்தில் பிள்ளை வளர்த்தி என்றும் பெயர் சொல்லாத மருந்து என்றும் அழைப்பர். வசம்பு எல்லாக் கடைகளிலும் கிடைக்கும்.வசம்பை தண்ணீர் விட்டு உரசி சிறிது தேன் விட்டு குழந்தைகள் நாக்கில் தடவ திக்கு வாய் மாறி நன்றாக பேசும். தொற்று நோய் நீங்கும். விஷப் புழுக்கள் அகலும் பசியைத் தூண்டும். வசம்பை தண்ணீரில் ஒரு நாள் ஊற வைத்து பாசி போல் அறுத்து குழந்தைகள் இரு கைகளிலும் கட்டி விடுவார்கள் அக்குழந்தைக்கு சீர்அடிக்ககாது தொற்று நோய் பரவாது. ஒரு வெள்ளை துணியில் சோற்றுப்பு கரைசலில் நனைத்து வசம்பில் எழு சுற்று சுற்றி துணி கருக நெருப்பில் சுட்டு வசம்பை பிரித்து அரைத்து பத்திரப் படுத்தவும். வசம்பும் கருகி இருக்க வேண்டும். வாந்தி பேதி உள்ள குழந்தைக்கு லசம்பு சுட்ட சாம்பலில் ஒரு அரிசி அளவு எடுத்து தேனில் குழப்பி கொடுக்க ஒரே வேளையில் பேதி நிற்கும். மற்றும் வயிற்றில் ஏதேனும் உணவு தங்கி இருந்தாலும் வெளியே வந்து விடும். இதில் பெரியவர்களுக்கு உள்ள மருத்துவத்தை நாளை பார்ப்போம். பிரம்ம ஸ்ரீ  கோவி...

தாமிர ரச சுண்ணம்

தாமிர ரச சுண்ணம் ஆய்வு அனைத்து சகோதரர்களுக்கும் ஆத்ம நமஸ்காரம் வெள்ளை எருக்கலம் பூச்சாற்றில் பத்து கிராம் சுத்தி செய்த தாமிரமும்  சுத்தி செய்து கட்டிய பாதரசமும் சேர்த்து அரைத்து புடம் போட்ட சுண்ணம் இது மூன்று புடம் போட்டது தான்.  இது மஞ்சளுக்கு கிழக்கும். தண்ணீரில் மிதக்கும் எவ்வளவு நெருப்பிற்கும் புகையாமல் நிற்கும். ஆனால் சுண்ணம் கடுங்காரமில்லை. இப்போது நூறு கிராமில் கடுங்கார சுண்ணமாக போட்டு வருகிறேன் அந்த சுண்ணத்தில் அரை அரிசி அளவு வாழைப் பழத்தின் காம்பில் வைத்து இருக்கிறேன். நான்கு நாட்கள் ஆகியும் பழம் அழுகாமல் லேசாக இறுகும் தன்மை அடைகிறது. கடும் சுண்ணத்திற்கு கொண்டு சென்றிருந்தால் இப்போது காயாக மாறி இருக்கும். எந்த ஒரு மருந்தும் முதலில் நான் சாப்பிட்டு பின் தான் மற்றவர்களுக்கு கொடுப்பேன். நான் சாப்பிட்ட நான்கு நாட்களில் உடம்பு அதிக சக்தி பெறுகிறது. முயற்சி செய்யாமல் உள் சுவாசம் நடைபெறுகிறது. அதிக வெயிலில் சென்றாலும் களைப்பு வருவதில்லை. இன்று மம்சாபுரம் பகுதியில் நல்ல மழை பெய்தது. அப்போது வேண்டும் என்றே மழையில் நனைந்தேன். ஆனால் குளிர் தெரியவில்லை. செம...

சளி இருமல் டானிக்

சிறுவர்களுக்கான சிறப்பு சளி இருமல் டானிக் அனைத்து சகோதரர்களேக்கும் ஆத்ம நமஸ்காரம் இந்த சிறப்பு டானிக் ஆறு மாத குழந்தைகளுக்கு மேல் கொடுக்கலாம். விஷ்ணு கிரந்தி சாறு 1 லிட்டர் இம்பூரல் வேர் சாறு.    1 லிட்டர் தூதுவளை சாறு.          1 லிட்டர் கண்டங்கத்திரி சாறு   1 லிட்டர் ஆடாதோடைச் சாறு.    1 லிட்டர் துளசி சாறு.                    1 லிட்டர் இண்டு இலைச் சாறு   1 லிட்டர் முள் சங்கு இலை சாறு 1 லிட்டர் ஓம வல்லி இலை சாறு 1 லிட்டர் வெற்றிலைச் சாறு.        1 லிட்டர் புதினா இலைச் சாறு    1 லிட்டர் மல்லி இலைச் சாறு.     1 லிட்டர் சுக்கு.           50 கிராம் மிளகு.         50 கிராம் திப்பிலி.      50 கிராம் அரத்தை.    50 கிராம் கிராம்பு.      50 கிராம் அதிமதுரம் 50 கிராம் இத்துடன் சுத்தமான தேன் 12 லிட்டர் சேர்த்து பக்குவமாக தண்ணீர் சத்து இல்லாமல...

நல்ல வேலை மூலிகை

Image
தலைவலி போக்கும் தைவேளை அனைத்து சகோதரர்களுக்கும் ஆத்ம நமஸ்காரம் நல்லவேளை என்றழைக்கப்படும் தைவேளை வெள்ளைப் பூ பூக்கும். இதில் இரண்டு வகை உள்ளது. படத்தைப் பாருங்கள். சிகப்பு தண்டுள்ளது அதிக சக்தி உள்ளது. தைவேளை இலையை கீரையாக சமைத்து சாப்பிட வேண்டுமானால் பூக்கள் பூப்பதற்கு முன் பறித்து நெய்யில் பொறித்து சாப்பிட இருமல் சளி மார்பு வலி தீரும். மலக் கழிவுகளை வெளியேற்றும். பெண்களுக்கு உதிரச் சிக்கலைப் போக்கும். தலைவலிக்கு சிறிது தைவேளை இலை சிறிது சோற்று உப்பு ஒரு நாட்டு சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து சாறு பிழிந்து மூன்று சொட்டு வலது காதில் விட இடது பக்க தலைவலியும் இடது காதில் விட வலது பக்க ஒற்றை தலைவலியும் தீரும். மேலும் பல வருடங்களாக இருக்கும் தலை வலிக்கு அதிக அளவு இலை எடுத்து பிழிந்து சாற்றை நீக்கி விட்டு இலைச் சக்கையை தலை முழுவதும் பரப்பி ஒரு துணியால் கட்டி 15 நிமிடம் கழித்து அந்த இலைச் சக்கையை பிழிய தலைநீர் சாறு போல் வெளியேறும். மீண்டும் மூன்று நாட்கள் கழித்து அதேபோல் செய்ய வேண்டும். இவ்வாறு மூன்று தடவை செய்ய நாட்பட்ட தலைவலி தீரும். தைவேளைப் பூ தைவேளைப் பூக்கள் அதிக...

சிவகரந்தை மூலிகை ரச மணி

Image
ஞான கற்ப மூலிகையான சிவகரந்தை மூலிகை ரசமணி அனைத்து சகோதரர்களுக்கும் ஆத்ம நமஸ்காரம் சிவகரந்தை மூலிகைகள் பயன்கள் பற்றி பல இடங்களில் குறிப்பிட்டு இருக்கிறேன். அதன் சாற்றில் சாரணை கொடுத்து முடிப்பது மிகுந்த காயகல்பம் மற்றும் வியாபார தொழில் வசியமாகும். படத்தில் இருப்தில் 16 கிராம்  20 கிராம் 35 கிராம்  175 கிராம் மற்றும் 280 கிராம் என்ற வகையில் சிவகரந்தை சத்தின் மூலம் சாரணை நடந்து கொண்டு இருக்கிறது. சுடு பாலில் ஒரு நிமிடம் ரசமணியை போட்டு பின் அந்த பாலை அருந்தி வர கம்பம். வாயில் வைத்துக் கொண்டு தியானம் செய்யலாம். அப்போது வரும்உமிழ்நீரரை அருந்த கம்பம். 280 கிராம் மணியை தலையில் வைத்து சுமார் 20 நிமிடம் செய்தாலே அன்று முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். மற்ற நேரம் பூஜை அறையில் வைத்துக் கொள்ள ஜன வசியம் தொழில் வசியமாகும். மணி கருப்படிக்காது. வெள்ளை துணியில் உரசினானும் சிறிது கூட கருப்பு வராது. கீழே போட்டாலும் உடையாது. நெருப்பிற்கு நிற்கும். இதன் குணங்கள் பல பல. சாதாரண கட்டியின் மேல் 280 கிராம் மணியின் அடிப்பாகத்தை சிறிது நேரம் வைத்து எடுக்க கட்டி கரைகிறது. வலி உள்ள...

சிறுநீரக கல் கரைய

சிறுநீரகக் கல் கரைய மருந்து... "ஏலரிசியும் தேங்காய்ப்பூவும் நெரிஞ்சிவேற் மாவி லங்கம் வேற் சிறு பூனை வேற்றிவை மூணும் அரைத்துக் தண்ணி விட்டு சிறந்து காச்சி இருவேளை ஆறுநாட் கொடப்பா கல்லுவீழும்".                                                                                  - அகத்தியர் நயன விதி - ஏலரிசி - 25 கிராம் தேங்காய்ப்பூ - 25 கிராம் நெரிஞ்சி வேர் - 25 கிராம் மாவிலங்கம் வேர் - 25 கிராம் சிறு பூனை வேர் - 25 கிராம் இவை அனைத்தையும் எடுத்து ஒரு புதுப் பானையில் போட்டு பத்தில் ஒருபங்காகக் காய்ச்சி அதாவது ஒரு லீட்டர் தண்ணீர் விட்டு நூறு மில்லி லீட்டராகக் காச்சி தினமும் காலை மாலை என இரு வேளையாக ஆறுநாள் குடிக்கக் கொடுத்தால் சிறுநீர் கழியும் பொது கல்லானது சிறுநீருடன் வெளியில் வந்து விடுமாம். இந்த மருந்து குடிக்க எந்தப் பத்தியமும் சொல்லப் படவில்லை. நன்றி, SMF மருத்துவக் ...

வல்லாரை கூட்டு

_*நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் வல்லாரை கூட்டு*_ *தேவையான பொருள்கள்:-* வல்லாரைக் கீரை – ஒரு கட்டு இஞ்சி(தோல் நீக்கியது) – 50 கிராம் மிளகு – அரை ஸ்பூன் பாசி பருப்பு – 100 கிராம் வெங்காயம் – ஒன்று பச்சை மிளகாய் – 2 கடுகு – அரை ஸ்பூன் எண்ணெய்,உப்பு – தேவையான அளவு *செய்முறை:-* வல்லாரைக் கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.  பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். சிறு பருப்பை வேகவைத்துக் கடைந்து, கீரையுடன் நறுக்கி வைத்துள்ளதையும் சேர்த்து, மீண்டும் கொதிக்கவைக்கவும்.  எண்ணெய்யில் கடுகு தாளித்துக் கொட்டிச் சாப்பிடவும். *பயன்கள்:-* வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு இது.  அற்புதமான நினைவாற்றலைத் தரக்கூடியது.  காக்காய் வலிப்பு, நரம்புக் கோளாறுகளும் குணமாகும். மேலும், உடல் எடையைக் குறைப்பதுடன், ரத்தத்தில் உப்பின் அளவையும் குறைக்கும்.  உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்காமல் கட்டுப்படுத்தக்கூடியது. நன்றி, நாசர் அலி, தூத்துகுடி

புட்டாலம்மைக்கு சித்த மருத்துவம்

புட்டாலம்மைக்கு சித்த மருத்துவம்: புட்டாலம்மை வந்தால் இரண்டு கன்னம்  வீக்கம் கண்டு வலி. சுரம் .நரிகட்டுதல் உண்டாகி உடல் பலகீனம் ஆகும். இதற்கு அனுபவமருந்து. துவரம்பருப்பு  5gm சுக்கு    5gm வேப்பிலை  சிறிது மஞ்சள் தூள் சிறிது 4சரக்கையும் தண்ணீர் விட்டு அரைத்து வலி வீக்கம்  உள்ள இடத்தில் தடவி வர முற்றிலும் குணம் 3முறை பத்து போடவும் நன்றி, சித்தமருத்துவன்  அ.மோகன். திருவண்ணாமலை SMF மாவட்ட செயலாளர்

காணாக் கடி, அலர்ஜிக்கு

காணாக்கடியால் ஒரு சிலருக்கு திடீரென அரிப்பும் தடிப்பும் ஏற்பட்டு அதனால் தொந்தரவு ஏற்படும். இதுவே காணாக்கடி என்பதாகும். இதற்கு மருந்து குப்பை மேனி இலை வேப்பிலை தும்பை இலை இவற்றை நான்கைந்து பறித்து கழுவி அரைத்து மிளகளவு சுண்ணாம்பு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று நாள் சாப்பிட அரிப்பு தடிப்பு நீங்கும். எல்லா நேரமும்  பச்சிலை தேடிட முடியாமல் போனால் இவற்றை சூரணம் செய்து வைத்துக் கொள்ளலாம். மற்றொரு முறை,  சிவனார் வேம்பு100, பறங்கிபட்டை100,குப்பை மேனி 100, கடுக்கா50 ,நெல்லிக்கா50, தான்றிக்காய்50 இலவங்க பட்டை50 கிராம்இந்த அளவில் எடுத்து பொடி செய்து கொண்டுஅதில் பல கரை பஸ்பம்20கிராம் கலந்து காலை 5கிராம் அளவில் காலைமாலை வெந்நீருடன் சாப்பிட அரிப்பு பூச்சி கடி கரப்பான் கிரந்தி,படை சொறி சிறங்கு மலச்சிக்கலால் வரும் அரிப்பு தீரும். மற்றொரு முறை, அவுரிவேர், சிறியாநங்கை, மிளகு இவற்றை சம அளவில் எடுத்து பொடி செய்து காலை மாலை 2கிராம் அளவு சாப்பிட விஷக்கடியினால் உண்டாகும் சரும பாதிப்பு நீங்கும். நன்றி வணக்கம் N.V. பாஸ்கரன் சென்னை SMF

தமிழ் மண்ணில் தலைமை சித்தர் பீடம்

சித்தர்கள் அருளால் நமது தமிழ் மண்ணில் பதினென் சித்தர்களின் தலைமை சித்தர் பீடம் உருவாக்கம்:   பதினென் சித்தர்கள் வழியில் நமது "சித்த மரபினர் கூட்டமைப்பானது" தலைமை சித்தர் பீடம் ஒன்றை நமது புனித மண்ணான தாய்த்தமிழ் மண்ணில் நிறுவி அதன் மூலம் கீழ்கண்ட திருப்பணிகள் செய்ய துவங்கியுள்ளது. 01. பதினென் சித்தர்களின் மார்கத்தில் உள்ள ஐவகை கலைகளான கால ஞானம், மந்திரவாதம், கற்ப ஞானம், யோகஞானம் மற்றும் மெய்ஞானம் முதலான மரபு கலைககளுக்கு உலக அரங்கில் இவ்வமைப்பே தலைமை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பில் பயணித்து சித்தராகிட இந்த உலகில் பிறந்த அனைத்து மக்களுக்கும் உரிமை உண்டு. 02. பீடத்தின் ஒழுக்க விதிமுறைகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட குருப்பரம்பரையை விதிஅம்சப்படி தேர்வு செய்து சித்த மார்கத்தில் சாதி, மதம், இனம், மொழி, பாலினம், வயது, நவீனக் கல்வித்தகுதி என எந்த பாகுபாடுமின்றி சித்த மார்கத்தை கற்று சித்தர் பயணத்தை மேற்கொள்ளலாம். 03. தலைமை சித்தர் பீடத்தின் மூலம் தனது குருப்பரம்பரையை பெற்ற குருமகா சன்னிதானங்கள் அவரவர் பெற்ற சித்த பரம்பரையின் பெயரில் ஆசிரமத்தை நிறுவுதல். 04. சித்தர்...

இரசவாதத்தின் அடிப்படை விளக்கம்

இரசவாதத்தின் அடிப்படை விளக்கம். சித்தர்கள் வழி முறைப்படி இரசவாதம் செய்து முடிக்க வேண்டுமென்றால் இதற்கான அடிப்படை இரகசியங்கள் அறிந்து கொள்ள வேண்டும். சாரம் விட்டால் செயநீர் போச்சு உப்பை விட்டால் கட்டு போச்சு கெந்தி விட்டால் வர்ணம் போச்சு துரிசு விட்டால் குருவே போச்சு இரசம் விட்டால் வாதம் போச்சு அதாவது : நவச்சாரம் இல்லாமல் செயநீர் ஆகாது. வெடியுப்பு இல்லாமல் பாசாணங்கள் கட்டு ஆகாது கெந்தகம் இல்லாமல் உலோகங்களில் வர்ணம் ஏறாது துரிசு இல்லாமல் குரு மருந்து முடியாது (இரசவாத குரு) பாதரசம் இல்லாமல் இரசவாதம் முடியாது. மேலும் புளியைக் கொண்டு உப்பைக் கட்டு என்பதற்கிணங்க உப்பு சரக்குகளிலும், பாசாணசரக்குகளிலும், உலோகங்களிலும் உப்பு, புளி சரக்குகள் அறிய வேண்டும். சத்ருவால் கொன்று மித்ருவால் உயிரெழுப்பு என்பதற்கிணங்க சத்ரு, மித்ரு சரக்குகள் அறிய வேண்டும். உருகினத்தாதி தெரிய வேண்டும். அதாவது உலோகங்கள் சுலபமாக உருகச் செய்யும் குருமருந்து ஆகும். வெட்டை தணிக்கும் குரு தெரிய வேண்டும். அதாவது செம்பு, வெள்ளி போன்ற உலோகங்களில் நாம் மருந்துகள் கொடுக்கும் போது அவை வெட்டையாகி விடும். அதாவது...

இரசவாத ரகசியம் அனுபவம்

*இரசவாத ரகசியம் அனுபவம்* பொதுவாக சித்தர்கள் கூறும் இரசவாத முறையில் இரசவாதம் முடிக்க வேண்டும் என்றால் மிகவும் சிரமமான காரியமாகும். அதாவது *ஜெயநீர், பாஷாண கட்டு, களங்கு, முப்பூ, குருமருந்து* போன்றவை தேவைப்படும்.ஆனால் பாரம்பரிய அனுபவ இரசவாத முறைகளில் மிகவும் சுலபமாகவும் செய்யக்கூடிய முறைகள் உள்ளன. அவைகளில் அனுபவப் பூர்வமாக  நடந்த ஒரு உண்மை சம்பவத்தை இப்போது பதிவு செய்கின்றேன் இது திருப்பூர் அருகில் உள்ள அவிநாசி என்ற ஊரில் நடந்ததாகும் இந்த ஊரில் சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு நண்பர்கள் 2 பேர் ரசவாத ஆராய்ச்சியில் ஈடுபட்டு சித்தர்கள் கூறிய பல்வேறு ரசவாத மருந்துகளை செய்து ஆய்வில் ஈடுபட்டு வந்தனர் அதில் ஒருவர் காரைக்குடியைச் சேர்ந்தவர் இன்னொருவர் அவிநாசி சேர்ந்தவர். பல வருடங்களாக ஏராளமான மருந்துகள் செய்து வந்த ஆய்வில் ஒரு வெற்றியை கூட அடைய இயலவில்லை. அப்போது அவிநாசியைச் சேர்ந்த இரசவாத ஆய்வாளருக்கு ஒரு மகானுடைய தொடர்பு ஏற்பட்டுள்ளது அப்போது அந்த மகான் இவருக்கு ஒரு இரசவாத மருந்து செய்முறை இரகசியத்தை உபதேசித்துள்ளார் அது காரைக்குடியை சேர்ந்த அவரின் நண்பரான இரசவாதிக்கு தெரியாத...

மூலக் குடோரி எண்ணெய்

மூல குடோரி எண்ணை தேவையான பொருட்கள் சிற்றாமணக்கு எண்ணை - 1 லிட்டர் கற்றாழை சாறு - 1 லிட்டர் எலுமிச்சை சாறு - 1 லிட்டர் பிஞ்சி கடுக்காய் - 150 கிராம் முதலில் பிஞ்சி கடுக்காயில் சிறிது ஆமணக்கு எண்ணை தடவி கடாயில் போட்டு வறுக்க வேண்டும். கடுக்காய் முந்திரி திராட்சை போன்று உப்பி விடும். சிறிது கடுக்காயை மட்டும் நன்றாக அரைத்து கற்றாழை சாறு எடுக்க பயன்படுத்தவும். மீதி கடுக்காயை ஒன்றிரண்டாக தட்டி மேலள்ள சாறு எல்லாம் ஒன்றாக கலந்து நீர் சுண்டிய பின் காய்ச்சி இரும்பு சல்லடையால் வடித்து பத்திரப் படுத்தவும். அவ்வளவு தான் மருந்து. அளவு - 1 தேக்கரண்டி முதல் 2 தேக்கரண்டி வரை இரவு மட்டும். நோயின் தன்மைக்கு ஏற்ப காலை இரவு கொடுக்கலாம். பயன்கள் : மூலம், கணை சூடு, மலச்சிக்கல், பித்த வெடிப்பு, உடலில் பித்தம், இருமல், தொடர் இருமல், ஆசனகடுப்பு, மூல சூடு, குன்மம், உடலில் கண்,மூக்கு,செவி,வாய் எரிச்சல், மார்பு எரிச்சல், தாகம் தீரும். இது குருநாதர் சொன்ன முறை ... அனுபவத்தில் நன்றாக உள்ளது. நன்றி, மேலும் பயணிப்போம் . . . J.லோகேஷ் குமார், வேலூர்.

அதி மூத்திரத்திற்கு

அதி மூத்திரத்துக்கு (அனுபவ மருந்து) சிலாசத்து பற்பம்(யானை நெரிஞ்சில் சாற்றில் போட்டது) - 20 கிராம் சங்கு பற்பம்(பிரண்டை சாற்றில் போட்டது) - 20 கிராம் பவள பற்பம் - 20 கிராம் அப்ரேக செந்தூரம் - 6 கிராம் இம்மூன்றையும் ஒன்று சேர்த்து திரிகடி அளவு காலை இரவு நெய்யில் உணவுக்கு முன்பு சாப்பிடவும் ... திராட்சை அரிஷ்டம் வாங்கி அதில் 3 கிராம் வெடிஅன்னபேதி செந்தூரம் சேர்த்து கலந்து தினமும் 15மில்லி தண்ணீர் கலந்து உணவுக்கு பிறகு சாப்பிடவும்... 3 நாளில் பலன் தெரியும் ... பல பேர்களுக்கு கொடுத்த அனுபவம். இரவில் 10 முறைக்கு மேல் எழுந்து போய் கொண்டே இருப்பார்கள் அவர்களுக்கு கொடுத்து பலன் கண்டது . . . அப்ரேக செந்தூரம் இல்லாமலும் கொடுக்கலாம். சேர்த்து கொடுத்தால் மேகத்துக்கும் சேர்த்து வேலை செய்யும்... மேலும் பயணிப்போம் . . . J.லோகேஷ் குமார், வேலூர்.

வெங்கார பற்பம்

வெங்கார பற்பம் அல்லது வெண்கார பற்பம் (அனுபவ முறை) வெங்காரம் - தேவையான அளவு முள்ளங்கி சாறு - தேவையான அளவு சுத்தமான வெங்காரத்தை வெள்ளை முள்ளங்கி சாறு மூழ்கும் அளவு ஊற்றி ஓரிடத்தில் வைத்து விடவும். அது தானாக வேதி வினை புரிந்து பற்பமாகும். வெங்காரம் புடமிடாமலே பற்பமாகும். அடுத்த நாள் அந்த முள்ளங்கி சாறு கலந்த வெங்காரம் அப்படியே கடாயில் முள்ளங்கி சாறு சுண்டும் வரை எரித்து வறுத்து பிறகு நெகிழ அரைத்து பத்திரப் படுத்தவும். அளவு : 200 மில்லி முதல் 400 மில்லி வரை அனுபானம் : இளநீர், வெந்நீர், முள்ளங்கி சாறு, வெண்ணை, நெய் பயன்கள் : வெள்ளை, பித்த நோய்கள், நீர்க்கட்டு, நீரடைப்பு, சதையடைப்பு, நீர் எரிவு, பெருவயறு, கரப்பான், இருமல், நீர் ஏற்றம், மூலகடுப்பு, கல்லடைப்பு, தொண்டை கம்மல் போன்ற பல நோய்கள் தீரும் ... பெருவயிறுக்கு : வாழை தண்டு சாறு - 30 மில்லி ஆமானகெண்ணெய் - 30 மில்லி இந்த வெங்கார பற்பம் - 1/2 முதல் 1 கிராம் வரை ஒன்றாக கலந்து கொடுக்க நன்றாக பேதி ஆகும், நீரும் தாராளமாக பிரிந்து பெருவயிறு தீரும் . . . நோயாளிக்கு தகுந்த அளவுகளை கூட்டியும், குறைத்தும் மருந்தை கொடுப்பது மருத்...

படிகார பற்பம் (அனுபவ முறை)

படிகார பற்பம் (அனுபவ முறை) படிகாரம் – ½ கிலோ இளநீர்  – 2 லிட்டர் யானை நெரிஞ்சில் – தேவையான அளவு முதலில் படிகாரத்தை மழை தண்ணீரில் கரைத்து ஒரு முரட்டு துணியில்  வடிகட்டி கொதிக்கவைத்து உறையும் பக்குவத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் பார்க்க சுத்தமான படிகாரம் கிடைக்கும். இளநீரில் யானை நெரிஞ்சிளை போட்டு துழவிக் கொண்டு வர அந்த இளநீர்  குழகுழப்பகவும் மாறும்(இது வைத்தியர்கள் அறிந்ததே). அதை அப்படியே படிகாரத்தை கடாயிலிட்டு அதில் இந்த இளநீரை விட்டு கொதிக்க வைத்து சாறு சுண்டிய உடன் மேலும் எரிக்க படிகாரம் பற்பமாகும். இந்த படிகாரத்தை ஒன்று ரெண்டாக உடைத்து கடாயில் நன்றாக வறுத்து மீண்டும் நெகிழ அரைத்து பத்திரப் படுத்தவும். அளவு : 100 மில்லி கிராம் முதல் 3௦௦ மில்லி கிராம் வரை அனுபானம் : மோர், பால், வெண்ணை, நெய், வாழை பூ சாறு, நீர்முள்ளி கசாயம், முள்ளங்கி சாறு, நெரிஞ்சில் கசாயம், இளநீர்  மேலும் பல ...   பயன்கள் : வெள்ளை, வெட்டை, குன்மம், சிறுநீரில் ரத்தம் வருதல், பித்த மயக்கம், உடல் எரிச்சல், நீர்க்கட்டு, நீர் கடுப்பு, சதையடைப்பு, பெரும்பாடு, பித்த நோய்...

மந்திரம், சோதிடம் உண்மையா

மந்திரம், ஜோதிடம் உண்மையா? பொய்யா? திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கத்தில் இருந்துவரும் ஒரு பழமொழி இதற்கு சான்றளிக்கிறது. *மந்திரம்தான் பொய்யானால், பாம்பை பாரு..* *மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு..* *சாஸ்திரம் பொய்யானால், கிரகணம் பாரு..* *சாமிதான் பொய்யானால் சாணம் பாரு..* இதுதான், நமது சந்தேகங்களை தெளிவிக்கும் சூத்திரம்.. *இதற்கான விளக்கம்:* மந்திரங்களில் சக்தியில்லை என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால் படம் எடுத்தாடும் பாம்பு முன்பாக  மந்திரத்தை உச்சரித்து பார்த்து சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்ளலாம். பயப்பட வேண்டாம், மந்திரம் சொல்ல தெரிந்தவரை சொல்ல விட்டு நீங்கள் தள்ளி நின்று இதைப் பார்க்கலாம் *மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு:* வாணவேடிக்கை பட்டாசுகளுக்குள் இருக்கும் மருந்து அந்த வெடியை வானத்துக்கு தூக்கிச் சென்று வண்ண கோலங்கள் காண்பிக்கிறது. மருந்தின் சக்தியை தெரிந்து கொள்ள வாண-வேடிக்கையை பாருங்கள் என்பதுதான் இதன் பொருள். *சாஸ்திரம்தான் பொய்யானால் கிரகணம் பாரு:* ஜோதிட சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, பஞ்சாகத்தில் முன்கூட்டியே பவுர்ணமி, அமாவாசை, ...

லோஹ பற்பம்

லோஹ பற்பம் : சன்னமாக ராவிய அரப்பொடியை பழுக்க காய்ச்சி திரிபலா கஷாயத்தில் 7 முறை துவைக்க சுத்தியாம் சுத்தி செய்த அரப்பொடியை திரிபலா கஷாயத்தால் 4 சாமம் அரைத்து வில்லை தட்டி காய வைத்து ஒட்டிலிட்டு மேலோடு மூடி சீலைமண் செய்து புடமிடவும் இவ்வாறு 16 புடமிட லோஹம் பஸ்பமாகும் அளவு 1/2-1 குன்றியெடை தினம் இரு வேளை நெய் அல்லது தேன் தீரும் நோய்கள் ரத்த குறைவால் உண்டாகும் எல்லா நோய்களையும் சரியாக்கும் ரத்த சுத்தியையும் ரத்த விருக்தியையும் உண்டாக்கும் பலம் புஷ்டி வீர்யம் அதிகரிக்கும் *ஆயுர்வேத ஒளஷத முறைகள்- பஸ்மங்கள்* செந்தில்குமார் லண்டன்

எருக்கிலை மகத்துவம்

வணக்கம்.                       .   எருக்கிலைகளை கோர்த்து (தையல் இலை)அதில் தயிர்சாதம் வைத்து சிவலிங்கத்திற்கு நிவேதம் செய்து பின் பிரசாதமாக சாப்பிட கர்ம வினைகள் தீரும்.அதிலுள்ள மருந்து அனுப்ரமானமாக உள்சென்று நலம்பயக்கும்.இது அகஸ்தியர் கர்ம காண்டதாதிலுள்ளது.இதன்படி நூற்றுக்கணக்கானவர்களிடம் சொல்லி குஷ்டம் குன்மம் நீரிழிவு வியாதிகள் குணமாக்கியுள்ளேன்.எருக்கின் பழுப்பில் சாறெடுத்து கௌரிசிந்தாமணியை சேர்த்து ஈரல் வீக்கத்தை குணப்படுத்தியுள்ளேன். விஷமும் அமிர்தமும் ஒரே நேர்கோட்டிலுள்ளவையே. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் அதே வேளை அளவைகுறைத்து சாப்பிட விஷமே அமிர்தம். இதுதானே சித்த தத்துவம்.....நன்றி சித்.வா.மனோகரன் சங்ககிரி மாநில இணைதலைவர் சேலம் மாவட்ட தலைவர்               T.S.M.A

கந்தகத் தைலம்

வணக்கம் விந்து மற்றும் நாத விருத்தி மற்றும் தம்பனத்திற்கு கெந்தக தைலம் சுத்தி கெந்தகம் 50கிராம் இதை வெள்ளாட்டுப்பால் 250கிராம் எடுத்து உலர உலர விட்டு அரைக்கவேண்டும்.பிறகு கரிசாலை சாற்றை 250கிராம் எடுத்து அதேபோல் அரைத்து ஆலம்பழ அளவு உருண்டைகளாக்கி நிழலில் உளர்த்தவும்.பூஞ்சை தோன்றினால் மதியம் இரண்டு மணிக்கு மேலுள்ள இறங்கு வெயிலில் உலரத்தவும்.பிறகு 250 மிலி குடுவையில் உருண்டைகளை போட்டு வாய்ப்பகுதிக்கு ஈஸ்வர மூலியின் கொடியை தளர தடுப்பாக அமைத்து ஒரு ஸ்டான்டில் தலைகீழாக பொருத்தி அதற்குமேல் 250 மிலி மேன்டல் ஹீட்டரை கவிழ்த்து மூடி மிக ஜாக்கிரதையாக சிறுக சிறுக வெப்பத்தை கூட்டி கருஞ்சிவப்பான நிற தைலம் வரும்வரையில் வெப்ப நிதானம் கடைபிடித்து பின் 40 முதல் 50 பாய்ன்ட் வரை வெப்பம் வைத்து முழுதைலம் வடிக்கவும்.இதை வெற்றிலையில் தடவி அதில் பால்அல்வா அல்லது தாதுவிருத்தி லேகியங்களில் வைத்து இரவில் சாப்பிட்டு பால் அருந்த ஆண்களுக்கு விந்தும் பெண்களுக்கு நாதமும் பெருகி தம்பனமும் சித்திக்கும். பரங்கி பட்டை சூரணத்தில் வைத்து சாப்பிட குஷ்ட நோயனைத்தும் குணமாகும். குறிப்பு.....ஆரம்பத்திலேயே அதிக வெப்பம் வ...

சுரபிகள்

வணக்கம் சுரப்பிகள் பற்றிய எனது அநுபவ ரீதியான புரிதல்களை பகிர்கிறேன்.மாற்றுக்கருத்துள்ளவர்கள் தவிர்த்துவிடலாம். நமது உடலிலுள்ள நாளமுள்ள மற்றும் நாளமில்லா சுரப்பிகளுக்கு உத்தரவுபோடும் நிலையில் நமது தலைமை செயலகமான மூளைதான் உள்ளது.சுரப்பிகள் இயங்காமைக்கு சுரப்பிகளை காரணம் காட்டுவதாலேயே மற்ற மருத்துவங்கள் பல நேரங்களில் தோற்கின்றன.உடலில் அந்த சுரப்பிகளின் தேவையை பெறும் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்பை கொண்டே மூளை அந்த குறிப்பிட்ட சுரப்பி சுரக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்கிறது.அந்த உறுப்பின் குறையை சரிசெய்தாலே சுரப்பி தன்வேலையை சரிவர செய்ய மூளை உத்தரவிடும்.மாறாக அந்த சுரப்பி சுரக்கவேண்டிய விஷயத்தை செயற்கையாக செலுத்தும் போது அந்த உறுப்பின் பழுது அதிகரிக்கிறது. உதாரணமாக பெண்களின் கர்ப்பப்பை சினைபப்பை கோளாருகளுக்கு தைராய்டு சுரப்பி பழுது என்று கணிக்கின்றனர்.ஆனால் அந்த உறுப்புகளின் பிரச்சினைகளை சரியாக்கி தைராய்டு நார்மல் என்ற நிலையை பல பேருக்கு நான் வைத்தியத்தில் நிரூபித்துள்ளேன்.சித்த மருத்துவத்தில் மட்டுமே இந்த மாதிரியான நோய்கனித்தல் முறைகள் உள்ளன.காரணமின்றி காரியமில்லை என்பதை நாம் உணர...

இலிங்க மெழுகு

வணக்கம் இலிங்க மெழுகு ============== ஒருபலம் சுண்ணாம்பில் வைத்து எரித்தெடுத்து சுத்தி செய்த இலிங்கம். 200 மிலி திரமான சாராயம் 200 மிலி பூண்டு இடித்துபிழிந்த சாறு. இலிங்கத்தை ஓட்டில் வைத்து சூடு கண்ட உடன் மேற்சொன்ன இருதிரவங்களையும் மாற்றி மாற்றி சுருக்கிட கொப்பளித்து வருவதுபோல் மெழுகு வரும் அதை இரும்பு கம்பியில் சுழற்றி எடுத்து சேகரித்துக்கொள்ளவும்.பின் அந்த சேகரித்தமெழுகை ஒன்று சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இரண்டு மிளகளவு தர உடலிலுள்ள வாயுக்கள் கலைந்து ஆசனத்தில் வெளிப்பட்டு போகும்.குடலிறக்க நோயில் சிறப்பாக வேலை செய்யும். வாதமுறை ========== 10கிராம் செம்பை உருக்கி கண்விட்டாடும்போது ஒருகிராம் மெழுகை கொடுக்க வாங்கும்.பின்பலமுறை உருக்கி மட்டத்திற்கான இலக்கணத்தை அந்த செம்பு அடையும்போது சம அளவு தங்கத்தை கொடுத்து ஊட்டமும் வர்ணமும் வரும்வரை மடக்கி மடக்கி உருக்கி எடுக்க சிவதரிசனமாம்.........நன்றி சித்.வா.மனோகரன் சங்ககிரி மாநில இணைதலைவர் சேலம் மாவட்ட தலைவர்               T.S.M.A

இரு பூர பற்பம்

வணக்கம் கழுத்தை சுற்றிவரும் கண்டமாலை புண்கள் புரைகள் கட்டிகள் ஆசனவாய் பிறப்புறுப்பு அடிவயிற்று பகுதி கருப்பை கர்ப்பப்பை போன்றவற்றிலுண்டாகும் புற்றுக்கட்டிகள் புண்கள் ஆகியவற்றுக்கான அநுபவ மருந்து இருபூர பற்பம் செய்முறை. சுத்தித்த பூரம் 7 கிராம் பச்சை கற்பூரம் 7 கிராம் இரண்டையும் கல்வத்திலிட்டு நன்றாக உறவுபட அரைத்து பிறகு எலுமிச்சம்பழ சாற்றை விட்டு மூன்றுமணி நேரம் அரைத்து ஒரே வில்லையாக செய்து நன்கு ஈரம் போக காயவைத்து சிறுஅகலிலிட்டு மூடி சீலைமண் செய்து காய்ந்ததும் கவசத்தின் இரண்டு பங்கு எடைவரட்டியை கொளுத்தி புகையடங்கியபின் கவசத்தை உள்ளே வைத்து கவசத்திலிருந்து புகை கானும் சமயம் கவனமாக பார்த்து எடுத்து ஆறவைத்து வில்லையை எடுத்து அரைத்து பத்திர படுத்தவும். அரிசியளவு பற்பத்தை தகுந்த அனுபானங்களில் தர மேற்சொன்ன நோய்கள் குணமாகும்.அநுபவம் நான்கு நாட்கள் காலை மாலை இருவேளை தந்து பின் ஒருவாரம் விட்டு தேவையானால் தரவும். நூல் ஆதாரம் ஜனாப் ஹக்கீம் பா.மு அப்துல்லா சாயுபு அவர்களின் அநுபோக வைத்திய நவநீதம் 4 ஆம் பாகத்திலுள்ளது. மேல் விரங்களுக்கு தனியலை வாட்ஸப் எண்ணில் தொடர்பு கொள்ளவும்........

பிரண்டை துவயல்

குழுவினர் பலர் கேட்டு கொண்டதால் எனது மருத்துவ முன்னோடி அவர்கள் கூறிய மருத்துவ குணம் நிறைந்த பிரண்டை துவயல் முறை. தேவையானவை கனுநீக்கி முனைகளை சீவி(தோலை உரிக்க வேண்டாம்) துண்டுகளாக நறுக்கிய பிரண்டை 150 கிராம் தக்காளி பெரியது 3 எண் உளுந்து கடலைபருப்பு வகைக்கு 35 கிராம் சிறிய வெங்காயம் 150 கிராம் பூண்டு 50 கிராம் தனியா 25 கிராம் இஞ்சி நறுக்கியது 35 கிராம் மிளகு சீரகம் வகைக்கு 10 கிராம் கருவேப்பிலை மல்லிதழை புதினா சிறிதளவு உப்பு தேவைக்கு வரமிளகாய்  5 எண் பசு நெய் 50 மிலி செய்முறை உளுந்து கடலைபருப்பு இரண்டையும் எண்ணையின்றி சட்டியிலிட்டு தனித்தனியாக பொன்னிறத்தில் வருத்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.பிரண்டையை நெய்விட்டு பழுப்பு நிறம் வரும்வரையில் வதக்கவும்.முழு தக்காளிகளை நெய்விட்டு தோல் உரிந்து வேகும் அளவிற்கு வதக்கவும்.பிறகு வெங்காயத்தை நெய்யில் இட்டு வதங்கியவுடன் வரமிளகாய் பூண்டு இஞ்சி முதலியவற்றை இட்டு வதங்கியவுடன் தேவையான உப்பு சேர்த்து பின் கருவேப்பிலை புதினா முதலியவற்றை சேர்த்து வதக்கி கடைசியாக தனியா மிளகு சீரகத்தை சேர்த்து வதக்கி இறக்கி வைத்து ஆறியவுடன் தேவைக...

இரச சுண்ணம்

வணக்கம். இரச சுண்ணம்: ஜனாப்,ஹக்கீம் பா.மு.அப்துல்லா சாயுபு அவர்களின் நூல்முறை. எனது செய்முறை அநுபவம். ஆறு அங்குல விட்டமுள்ள கிழங்குக்கு மேல் வெட்டப்பட்ட வாழை மரத்துண்டு ஒன்னரை அடி உயரத்தில் எடுத்துக் கொள்ளவும்.இரண்டு பக்கங்களையும் கத்தி கொண்டு சமமாக அறுக்கவும்.மேல்பாகத்தில் ஒரு இன்ச் பிளாஸ்டிக் அல்லது இரும்பு பைப்பின் ஒரு முனையை சாய்வாக அறுத்து அதன்மூலமாக ஐந்து அங்குல ஆழத்திற்கு சுழற்றி சுழற்றி துளைஇடவும்.பைப்பை உருவியபின் நடுவில் உள்ள தண்டை சிறுகத்தி மூலம் சிறிது சிறிதாக நீக்கி அந்த துகள்களை பத்திரபடுத்தவும்.குப்பை மேனி மற்றும் கவிழ்தும்பை செடிகளின் இலைகளை விழுதாக அரைத்து அந்த துளையின் கீழும் பக்கவாட்டிலும் கால் அங்குல கணத்தில் பூசி வெய்யிலில் உணர்த்தவும்.உதிராத அளவு உணர்ந்ததும்.சுத்திசெய்த இரசத்தை மூன்றரை கிராம் அளவிற்கு அந்த துளையில் இட்டு இரண்டு அங்குல அளவிற்கு நிற்குமளவு மேற்கண்ட இரண்டு மூலிகைகளின் சாறைவிட்டு தண்டு துகள்களால் கவனமாக அடைக்கவும். ஒன்னேகால் அடி விட்டமும் ஒன்னரை அடி ஆழமும் கொண்ட ஒரு குழியை சமமான தரையில் தோண்டி அடியில் ஒரு அடி விட்டமுள்ள மண்தாளத்தை வைக்கவும்.ஏ...

கல்லுப்பு

வணக்கம் கல்லுப்பு ======== பொதுவாக கல்லுப்பு என்பது ஒரு உயரிய பொருள் என்பதில் மாற்று கருத்து இல்லை.இடத்திற்கு தக்கவாறு சித்தர்கள் மாற்றி மாற்றி கூறி நம்மை சிந்திக்க வைத்து செம்மை படுத்துகின்றனர். 1,கல்சுண்ணாம்பை எட்டு நீர்விட்டு நீற்றி கலக்கி கலக்கிவிட்டு நான்காம் நாளிலிருந்து தெளியவிட்டு மேலே படியும் உப்பை கவனமாக தினம்தோறும் சேமித்து காயவைத்து எடுக்க கல் உப்பு என பெயர் பெறும்.பாஷானங்களை கட்ட இது பயன்படும்.இதை நேரடியாக உள்ளுக்கு சாப்பிட கூடாது. 2,சோற்றுப்பு விளையும் உப்பளங்களில் இரண்டடிக்கு கீழுள்ள உப்பை கல்லுப்பு என்று இருபது வருடங்களுக்கு முன் கடைகளில் விற்று வந்தனர்.தற்சமயம் கிடைப்பதில்லை.இதை கட்டனால் இரசத்தை கட்டும். 3,சோற்றுப்பை பல வழிகளில் கட்டலாம்.இதில் ஒரு சூட்சுமம் உள்ளது. பஞ்ச பூத மூலிகைகளை கொண்டு ஐந்துவிதமாக கட்டலாம்.இதில் நம் தலைப்புக்கு பொருந்தும் கல்லுப்பு இலக்கண கட்டைமற்றும் கவனிப்போம்.நாட்டு நிலாவரை மூலியமாக கட்டிய சோற்றுப்பு நீர்பூத கட்டாகும்.அது நீரினில் கரையாது.சுவை இருக்காது.நெருப்பினில் உருகும். கல்லுப்பென்றால் கரைந்திடா நீரினில் கொல்லுமே சூத வேதைக்காகு...

லிங்க செந்தூரம்

வணக்கம்                   லிங்க செந்தூரம் 36 கிராம் லிங்கம் எலுமிச்சம்பழச் சாறு 600 மில்லி வெள்ளை வெங்காயச் சாறு 600 மில்ல சுத்திசெய்த சேராங்கொட்டை 432 கிராம் பசுவின் நெய் 432 கிராம் திறமான தேன் 432 கிராம் செய்முறை லிங்கத்தை எலுமிச்சம்பழச்சாற்றில் கிழி கட்டி சிறு தீயாக எரித்து எடுத்துக்கொள்ளவும் சாறு முழுவதும் சுண்டி இருக்க வேண்டும். அதேபோல் வெள்ளை வெங்காயச் சாற்றிலும்  எடுத்துக் கொள்ளவும். சேராங்கொட்டை மைபோல் இடித்து அதனுடன் நெய்யையும் தேனையும் கலந்து இரும்பு சட்டியில் விட்டு அதில் மேற்சொன்ன லிங்கத்தை போட்டு சிறு தீயாக எரித்து முடிவில் சுண்டியவுடன் தீப்பிடித்து எரிந்து அடங்கிகிவிடும். ஆறிய பின்பு லிங்கத்தை எடுத்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். இது ஒரு அருமையான லிங்க செந்தூரம் ஆகும். அளவு:  ஒன்று முதல் இரண்டு குண்டுமணி அளவு தீரும் நோய்கள்:  தலை மூளை இருதயம் ஈரல் மண்ணீரல் முதலியவை பலப்பட்டு தாது வளமை தேகதிடம் மனோதிடம் முதலானவை அதிகமாகி நல்ல தேக ஆரோக்கியத்தை கொடுக்கும். குழந்தையின்மைக்கான லேகியங்களில் அனுபா...

கிரகம், சத்து, உறுப்புகள் தொடர்பு

வணக்கம் கிரங்கள்.  சத்துக்கள்  பயனடையும்                                           உறுப்புகள் சூரியன்.    தங்கம்.        இருதயம்                                            மூளை சந்திரன்.    வெள்ளி.     நரம்புகள் செவ்வாய்  இரும்பு.       இரத்தம்                                             மஜ்ஜை புதன்.           பாதரசம்.     விந்து                                           சுரோனிதம் வியாழன்.   வங்கம்.     தொப்புள்   ...

சர்கரைக்கு

வணக்கம் படிகார வெடியுப்பு விராலிஇலை கலந்தபற்பம் ஐயர் ஐயா கூறியதுபோல் முதலில் செய்தோம் கருப்பாக வந்தது.விராலிஇலை சரிவர கலங்காதது போல இருந்தது.பிறகு எனது யோசனையில் சிறிது மாற்றி செய்தேன்.மிக அருமையாக முடிந்தது.ஒரே வேளை மருந்தில் வெகு மூத்திரம் கட்டுக்குள்வந்தது. நான் செய்தமுறை. அரைகிலோ படிகாரம் பொறித்துக்கொள்ள வேண்டும்.அரைகிலோ வெடியுப்பு மட்டும் எடுத்து அயசட்டியிலிட்டு உருக்கி அது வாங்குமளவு விராலி இலை பச்சையாகவே சிறிது சிறிதாக போட்டு எரிந்து அடங்கியவுடன் மறுபடியும் போட வேண்டும்.சுமார் ஒன்னரை கிலோ விராலியிலை தேவைபட்டது.கடைசியில் இலையை போட எரியாமல் இருப்பின் பதம்.அந்த நிலையில் ஏற்கனவே பொறித்து வைத்துள்ள படிகாரத்தை போட்டு தீயை அதிகமாக்கி கிளறிவிட சந்தன நிறத்தில் அருமையான கடுங்கார சுண்ணம் கிடைத்தது. இதை நீரிழிவு சர்க்கரை நோய் கட்டிகளை கறைக்க முதலியவற்றிற்கு தக்க அநுபானத்தில் தர குணம்கானலாம்.....நன்றி வா.மனோகரன், SMF சங்ககிரி. +91 98427 41067,

லிங்க கட்டு

வணக்கம் குழுவில் உள்ள அனைத்து சொந்தங்களுக்கும் இதயம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள். தீபாவளி பரிசாக ஓர் அநுபவ பாஷாண கட்டுமுறை. இலிங்க கட்டு ============ இலிங்கம்.              36 கிராம் துருசு சுண்ணம்.   180 கிராம் வெடியுப்பு சுண்ணம் 252 கிராம். பொருத்தமான இரண்டு அகல்களை எடுத்து வாய்பகுதியை தேய்த்து இடைவெளியின்றி பொருந்த செய்யவும்.தண்ணீர் விட்டு நீற்றிய கல்சுண்ணாம்பு சம அளவு சோற்றுப்பு இரண்டையும் நீர்விட்டு அரைத்து இரண்டு அகலின் உள்புறத்தில் ஒரு அங்குல கணம் பூசி காயவைக்கவும்.வெடிப்புகள் ஏற்படின் மறுபடி சிறிது பூசி காயவைக்கவும்.பிறகு ஒரு அகலில் வெடியுப்பு சுண்ணம் 126 கிராம் இட்டு அதன்மீது துருசு சுண்ணம் 90 கிராம் இட்டு அதன்மீது இலிங்க கட்டி 36 கிராம் வைத்து மேலே துருசு சுண்ணம் 90 கிராம் இட்டு அதன்மேல் வெடியுப்பு சுண்ணம் 126 கிராம் இட்டு சுண்ணாம்பு உப்பு பூசி காயவைக்கப்பட்ட மேலகல் மூடி ஏழு சீலைமண் செய்து நன்கு காயவைத்து 100 கிராம் எடையுள்ள 25 எருவில் புடமிட உருகி கட்டும்.இதே போல அனைத்து பாஷானங்களையும் கட்டலாம். வெடியுப்பு சுண்ணம் ==...

முதலாம் ஆண்டு நிறைவு அக்டோபர் 16 2018

அனைத்து பாரம்பரிய சித்த உறவுகளுக்கும் வணக்கம், சித்தர்களின் அருளால் நமது அமைப்பானது துவங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது, அனைத்து பாரம்பரிய சித்த மருத்துவர்களின் தொழில் பாதுகாப்பு, அரசுப் பதிவு, அரசு அங்கீகாரம், அரசுத் தரப்பில் பிரதிநிதித்துவம், சட்ட ரீதியான பாதுகாப்பு, அரசு தரப்பில் தனி கவுன்சில் மற்றும் தனி வாரியம் ஏற்படுத்துதல் மற்றும் நமது பாரம்பரிய சித்த உறவுகள் அனைவரையும் பங்குதாரர்களாக்கி உலகத் தரத்தில் ஒரு மருந்து செய் நிறுவனத்தை ஏற்படுத்தி உலக மருந்து வர்த்தகத்தை நமது மண்ணை நோக்கி ஈர்த்து பாரம்பரிய சித்த மருத்துவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், சித்தர்களின் பரம்பரையை அறிவித்து அனைத்து ஊர்களிலும் சித்தர்களின் வழியில் ஆசிரமங்கள் மற்றும்மடங்களை நிறுவி நமது பாரம்பரியத்தை மீண்டும் புத்துயிர் கொடுத்து நிலைப்பெற செய்தல் முதலான புனிதமான கொள்கைகளை கொண்டு பயணிக்கத் துவங்கினோம். எவ்வளவோ எதிர்ப்புகள், துரோகங்கள், இருட்டடிப்புகள், கருத்துத் திருடு முதலான வஞ்சகங்களை கடந்து நமது இலக்கை நோக்கிய பாதையில் நெறிபிசகாமல் சிறப்பாக வெற்றிப் பயணம் செய்து ஒரு வருடத்தை கடந்துள்ளோம் என்பது சித்தர்க...

இருதய அடைப்பிற்கு வெடியுப்பு சுண்ணம்

Image